நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள், நம் பசிக்கு உணவளிக்கும் தெய்வங்கள்! அவர்கள் இன்றி இருள் சூழும் இந்த பூமியே, அவர்கள் இழப்பில் ஆனந்தம் கொள்கிறது இன்று இந்த உலகமே! புவி தனில் சொர்கத்தை அமைக்கும் விவசாயம், நாட்டின் வளர்ச்சியில் பங்குபெறாமல் ஒதுக்கப்படுவதேனோ? நம் வழற்சிக்கே அவர்கள் தான் தேவை என்பதை மறந்துவிட்டிமோ? வாழ்த்தி போற்ற படவேண்டியவர்கள் அவர்கள், ஆனால் தாழ்த்தி வெய்திருக்கிறோமோ? தன்னிலை மறந்து நண்பகல் வெய்யிலில் கலப்பை பிடித்து, துணிவோடு இருந்தும்ஸ் துணிச்சல் இல்லாமல், தற்கொலை செய்து கொள்வதேனோ? மழை தூரமால், பூமியே வறண்டு, பயிர்களும் சாய, விவசாயம் சிதைந்து விட்டதோ? மண்ணிலே பிறக்கும் நாங்கள், மண்ணிலே வளரும் நாங்கள், மண்ணில் மாண்டு போகும் மனிதர்களோ? அந்த மண்ணில் விளையும் கதிர்களுக்கு, நெகிழி எனும் நஞ்சை ஊற்றி வளர்த்து, விவசாயிகளின் வாழ்வை அளித்து வருகிறோமோ? விவசாயம் நமக்கு வெறும் தேவை இல்லை, விவசாயம் ஒரு அத்தியாவசியம் என்று புரிந்துகொள்ளாமல், நம் உயிரை நாமே பறித்து வருகிறோமோ? இதற்கு விடை உள்ளதோ? நம் நாட்டின் நிலமை மாறுமோ? ஜல்லிகட்டிற்கு, நாம் எல்லோரும், கை...