Skip to main content

Marubadi paarthadhal

               மறுபடி பார்த்ததால்
இக்கதை ஒரே துறையின் மீது பேரார்வம் கொண்ட , ஒரே கனவால் இணைந்திருக்கும் ஒவ்வொரு காதல் ஜோடிகளுக்கும் சமர்ப்பணம்.

கடந்த காலம் (Past)
ஒரு பொன்மாலை பொழுது! என் தோழி தீபாவும் நானும், கல்லூரியின் சாலை ஓரம், வானின் அழகை பற்றி வர்ணித்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தோம். அப்போது, அவள் சகோதரன் கார்த்திக்கை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள்.

தீபா : யூ நோ (u know ), என் அண்ணா க்கு எவ்ளோ நல்ல சான்ஸ் (chance ) கெடச்சுது! பட் (but ) அவன் மிஸ் (miss ) பண்ணிட்டான்.
மாயா : அப்டியா? என்னாச்சு?
தீபா : உனக்கே தெரியும்ல, அவன் ஒரு மியூசிக் (music ) பைத்தியம். ஒரு நல்ல கி போர்டு (keyboard) பிளேயர் (player) உம் கூட! நல்ல தான் வாசிப்பான். இல்லன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். பட் அவனுக்கு கெடைக்கிற வாய்ப்பை யூஸ் (use) பண்ணிக்க தெர்ல.
மாயா : நான் கூட கேள்வி பட்டேன். ஏன் உன் அண்ணா அவ்ளோ கோவ பட்டாரு? அனிதிங் சீரியஸ்? (anything serious )
தீபா : அவங்க ஏதோ ஆல்பம் சோங் க்கு மியூசிக் பண்ண இவன கூப்ட்ருந்தாங்க. இவனும் நெறய மியூசிக் ட்ரை (try) பண்ணான். பட் வேணும்னே அந்த் டைரக்டர் (director) இவன ரிஜெக்ட் பண்ணி, எதுமே பிடிக்கல ன்னு சொல்லிருக்காரு! அதுக்கு என்ன காரணம் ன்னா, இவனும் அவுரும் 1ஸ்ட இயர் (1st year) ல பிரிஎண்ட்ஸ் (friends) ஆ இருந்து நடுல ஏதோ பிரச்சனை ல பிரிஞ்சுட்டாங்க! இப்போ இவன் எது பண்ணாலும், அவுரு பண்ணவே விடாம, ஏதோ ஒரு பிரச்னை பண்றாரு! இவனும் ரொம்ப நாள் பொறுத்து பாத்துட்டான். பட் இந்த டைம் (time) அவன்நால கண்ட்ரோல் (control) பண்ண முடியல.
மாயா : என்னவோ போ. கெடச்ச சான்ஸ'அ  (chance) ஏன் இப்டி மிஸ் பண்றாங்கன்னு தெர்ல. இப்டியே எல்லா சான்ஸ் உம் போயிரும்.
தீபா : அது அவனுக்கு புரியனுமே! சும்மா dreams passion ன்னு சொல்லிட்டு இருக்கான். ஆனா ஒன்னும் பண்ண மாட்டேங்கிறான்.
மாயா : எனக்கு சான்ஸ் (chance) கிடைக்கல ன்னு வறுத்த பட்டுட்டு இருக்கேன். பட் உங்க அண்ணன் எல்லாத்தையும் லூஸ் (lose) பண்ணிட்டு இருக்காரு.
இப்படி எல்லாம் அவனை பற்றி சொன்னாலும், இதயத்தின் ஏதோ ஓரு மூலையில் அவன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.  உணக்கானவன் இவன் என்று அந்த இறைவனே என்னிடம் கூறியது போல் இருந்தது. அவனை பற்றி நான் சொல்லி விட்டேன். அவன் என்னை பற்றி என்ன சொல்கிறான் , பார்ப்போம்!
 தீபா : டேய் அண்ணா, மாயா நாளைக்கு காலேஜ் (college) கள்சுரல்ஸ் (culturals) ல பாட போரா. அதுவும் உனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு "மன்னிப்பாயா".
கார்த்திக் : அப்படியா, செரி செரி, பாக்கலாம் நாளைக்கு எப்படி பாட போரான்னு, எனக்கு பிடிச்ச பாட்டு வேற, சொதப்ப வேண்டாம் ன்னு சொல்லிரு.
தீபா : நல்லா தான் பாடுவா, ஓவரா (over ah) பண்ணாத.
கார்த்திக் : நீ என்ன சப்போர்டா (support ah), படி போ.
தீபா : இரு, அவ தான் கால் (call) பண்றா. ஹலோ (Hello)! சொல்லு டி.
மாயா : ஹேய் தீபா, என்னோட தாத்தா ரொம்ப சீரியஸ் (serious) ஆ இருக்காங்க டி சென்னைல , அம்மா அப்பா இப்போவே கெளம்பரங்க ஊருக்கு, எனக்கு என்ன பண்றதுனே தெர்ல, நானும் கெளம்பறேன் டி!
தீபா : ஏய் நீ என்ன லூஸா.. நாளைக்கு கள்சுரல்ஸ் டி, நீ பாட போற, for the first time. இப்போ போயி இப்படி சொல்ற.
மாயா : நான் என்னடி பண்ண முடியும், போயி தான் ஆகணும். வேர வழி இல்லை.
தீபா : அம்மா அப்பா போகட்டும். நீ எங்கே வீட்ல வந்து இரு. ஒரு நாள் தானே?
மாயா : ஐயோ... என் அம்மா பத்தி உனக்கு தெரியாதா டி, அப்டி விற்றுவங்களா என்ன, நானும் எவ்ளோவோ சொல்லி பத்துட்டேன், பட் கேக்கவே மாட்டேங்கிரங்க.
தீபா : ஏண்டி இப்படி பண்ற, சேரி என்னமோ பண்ணு, bye!
மாயா : sorry, bye டி.
அவர்கள் உரை ஆடலை நானும் கேட்டு கொண்டு தான் இருந்தேன்  பெற்றோர்கள் சொல் பேச்சை கேட்டு, அவள் நடப்பது சரி தான். ஆனால், சில நேறங்களில் நம் விருப்பு வெறுப்புகளையும் அவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என்பதை மறந்துவிட்டாள் அவள். அவள் கனவை நோக்கி பயணிக்கும் பாதையில் தோன்றும் முர்க்களை பூவாக்கமல், அதை மிதித்து, அவள் கால்களை ஏன் ரணமாக்கி கொள்கிறாளோ, தெரியவில்லை. என்ன தான் இருந்தாலும், ஒரு வகையில் எனக்கு அவளை மிகவும் பிடித்தது. எங்கள் இருவரின் பாதை வேர் ஆனாலும், துறை ஒன்றுதான், கனவும் ஒன்றுதான், இலக்கும் ஒன்றுதான். ஆகையால் தான் மனம் அவளை விரும்பியதோ???
நிகழ்காலம் (present)
கார்த்திக், BE, மூன்றாம் வருடம்
மாயா, BE, இரண்டாம் வருடம்.
இருவரும் இசை என்ற ஒன்றால் இணைந்திருக்கிறோம்.
இருவருக்கும் அடுத்த கலை நிகழ்ச்சியின் பொறுப்பாளர் என்ற பதவி கிடைத்தது. அன்றில் இருந்து, இருவரும் அதிக நேரம் ஒன்றாக இருந்தோம். கலை நிகழ்ச்சிகள் முடியும் வரை, மதியம் வகுப்புகளுக்கு செல்லாமல் இருக்க, அனுமதி கிடைத்தது. அதிக நேரம் அவனோடு கழித்தேன். தீபா என்னிடம் அவனை பற்றி எல்லாம் சொல்லி இருந்தாலும், அவனோடு நான் இருக்கும் வேலையில் தான் அவன் உண்மையான குணம் எனக்கு புரிந்தது. வாழ்வின் அர்த்தம் புரியும் நொடிகள் அறிந்துகொண்டேன்.
வாழ்க்கை வாழ்வதே அவன் ஒருவனுக்காக தான் என்று தெரியமாக சொன்னேன். அவனோடு கழித்த ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்களை அவன் தந்தான். "காதல்" மேல் சிறிது அளவும் கூட நம்பிம்கை இல்லாத எனக்கும் அது நேர்ந்துவிட்டது. அவனை முதல் முறை கண்ட நொடியே புது வித உணர்வுகள் எழுந்தது. அவனை நினைக்க முயன்றால், நழுவுகிறான், மறக்க முயன்றால், தோன்றுகிறான். அந்த மாய கண்ணன் போலே இவன் லீலைகள் அவன் வலையில் என்னை விழ வைத்தது. அந்த வலையில் வீழ்ந்ததனால் தானோ இன்று சுதந்திர சிறகுகளோடு பறந்துகொண்டிருக்கிறேன். அவன் விழி, அவன் மொழி, அவன் சுவாசம், அவன் வாசம், அவன் பேச்சு, அவன் மூச்சு, அவன் நடை, அவன் உடை, இந்த ஒவ்வொன்றும் என்னை ஈர்த்தது. முதல் முறை என் கண்கள் அவன் கண்களோடு இணைந்த போது அந்த பார்வையில் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருந்தது போல் தோன்றியது. அந்த அறை நொடியில், அவனோடு என் வாழ்வை முழுதுமாக வாழ்ந்துவிட்டேன். இனி வேறு என்ன வேண்டும் எனக்கு.
எங்கள் காதல் கதை இப்படி தான் துவங்கியது. தினமும் இருவரும் சந்தித்துக்கொண்டு பேசிக்கொள்ளவோம். இரு நாட்கள் மிக முறையாக கலை நிகழ்ச்சிகள் சார்ந்தே இருந்தது. அந்த பின்பு ஒவ்வொரு நாளும் எங்கள் உரையாடல் வெவ்வேறு விஷயங்களை பற்றி மாறி கொண்டே வந்தது
அப்போது தான் அன்று நடந்த சம்பவத்தை பற்றி அவன் என்னிடம் சொன்னான். அன்று, அந்த இயக்குனர், கூறிய ஓவ்வொரு வார்த்தையும் அம்பை போலே மனதை புன் படுத்தியது என்பதை இப்போது தான் புரிந்துகொண்டேன். உன்மை என்னவென்று எனக்கு தெரிய வந்ததும், அவன் இன்னும் ஒரு படி மேலே சென்றான் என் நெஞ்சில்! என்னை பற்றி அவன் மனதில் எழுந்த சந்தேகங்களுக்கும் விடை கிடைத்தது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும். இதுவரையில் அவனை போல் எவரும் என்னை புரிந்து கொண்டதில்லை. ஒருவர் மேல் ஒருவர் ஆசையோடு இருந்தோம். அது காதலாக மாற சில நாட்களே தேவை பட்டது.
ஒரு நாள் என் குடும்பத்தை பற்றி, என் பெற்றோர்களை பற்றி அவன் என்னிடம் கேட்டான். நானும் அவர்களை பற்றி சொன்னேன்.
மாயா : அவங்க ரொம்ப ட்ராடிஷனல் (traditional). இன்னுமே இந்த மாடர்ன் லைஃஸ்டைல் (modern lifestyle) க்கு அடப்ட் (adapt) ஆக முடியல.
கர்த்துக் : நீயும் எதுவும் சொல்ல மாட்டியா?
மாயா : எத்தனையோ தடவை நானும் சொல்லி பத்துட்டேன்
பாத்துட்டேன். பட், அவங்க்ளால மாற முடியல. அன்னிக்கு culturals க்கு கூட அவ்ளோ கேட்டு பாத்தேன். எதுமே அக்ஸ்ப்ட் (accept) பண்ணல. அவங்களுக்காக இருக்கிறது நான் மட்டும் தான். சப்போர்ட் (support) க்கு கூட யாரும் இல்லை. எனக்கும் அவங்க மட்டும் தான். அவங்க வார்த்தையை என்னால மீற முடியாது.
அன்று நான் என் நிகழ்ச்சியில் பாடவில்லை என்பதை இன்று அவன் புரிந்து கொண்டான். என்னையும் என் குணத்தையும் முழுமையாக அறிந்துகொண்டான்.
தினமும் இருவரும் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். அவன் என் அருகே அமருவான். அவன் வாசனை என்னுள் ஏதோ செய்யும். அறியாமல் என்னை தோடுவான். அந்த ஸ்பரிசத்தில் கரைந்துவிடுவேன். தெரியாமல், என் விரல்கள் அவன் மேல் படும். அந்த நொடியே உறைந்து விடுவேன். இனி வரும் ஒவ்வொரு நிமிடமும் அவனுக்காகவே வாழ வேண்டும் என தோன்றும்.
கலை நிகழ்ச்சிகளுக்கு முந்தைய நாள், எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்துவிட்டு, தேவையான பொருட்களை அங்கங்கு பொறுதிவிட்டு, மேடையை அலங்கரித்து விட்டு, வேலைகள் எல்லாவற்றையும் முடியது விட்டு, வீடு திரும்பினோம் இருவரும். இரவு 9:30 மணிக்கு என் மொபைல் (mobile) க்கு ஒரு வாட்சப்ப் (whatsapp) message வந்தது. அவனாக தான் இருக்கும் என்று நினைத்து வேகமாக சென்று எடுத்து பார்த்தேன்.
கார்த்திக் : I think today is the last day that we're going to spend as individuals. From tomorrow, there will be no 'YOU' and 'ME'.
மனம் மகிழ்ந்தது. தேகம் உறைந்து. அவன் சொல்வது புரிந்திருந்தாலும், புரியாதது போல நடித்தேன்.
Maya : what? I don't understand!
Karthik : I'm serious, not kidding babe! Please don't ever say no to this. *Will u marry me?*
இந்த ஒரு வார்த்தைக்காக தான் இத்தனை நாள் நான் காத்திருந்தேன். நாளை நேரில் சொல்கிறேன் என சொல்லிவிட்டேன்  அவனுக்கு, ஒரு சிரிய காகிதத்தில் எழுதினேன் ~
" We're not still u and me, we're 'us'."

எதிர்காலம் (future)
இன்று எங்கள் முதல் ஆண்டு கல்யாண நாள். 26/07/2018
அவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
" என்னவனே, என் கண்ணாளனே, மன்னவனே, என் மணாளநே... முதல் முறை உனை கண்ட போது என் மனம் எவ்வாறு துடித்ததோ, அதே போல தான் நீ ஒவ்வொரு முறை என் அருகில் வரும்போதெல்லாம் துடிக்கிறது. பல தடைகள் தாண்டி, இன்று நாம் கணவன் ~ மனைவி ஆகிவிட்டோம். ஆனாலும், நம் நேசமும், அன்பும், காதலும் மாறவே மாறாது என உறுதியாக சொல்கிறேனடா.. உன் கண்களில் தெரியும் இரக்கமும் அன்புன் நேசமும் அழகு. இதழ்கள் பிரியாமல் நீ சிரிக்கும் வேளையில் கன்னத்தில் விழும் குழி அழகு... துயரத்தில் ஒருவரை கண்டால், அவரை நீ அரவனைப்பது அழகு.
உன்னோடு நான் வாழும் இந்த வாழ்க்கை மிக அழகு... கன்னங்கள் சுருங்கிட, என் குழலும் நரைத்திட, இதே காதலோடு இருவரும் வாழ்வில் பயணித்திடுவோம்."
    ~ Maya Karthik

ஏன் இந்த தலைப்பு (மறுபடி பார்த்ததால்)?
ஒருவர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை பார்த்தோ கேட்டோ அறிந்துகொள்ள இயலாது. அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து பார்த்து, புரிந்து கொண்டல் மட்டுமே அவர்கள் கஷ்டம் புரியும். இக்கதையில் மாயா கார்த்திக்கை பற்றியும், கார்த்திக் மாயா வை பற்றியும் வைத்திருந்த அபிப்ராயம் தவறு என்பதை அறிந்து கோண்டதால் தான், ஒரு அழகான வாழ்விற்கு புது அர்த்தம் கிடைத்தது. மறுபடியும் சரியாக பார்த்தார்கள் அவர்கள் வாழ்க்கையை.
இசையின் மீதும் இசை துறையை சார்ந்த ஒருவரின் மீதும் காதல் கோண்டால், வாழ்வே அழகாக மாறுமே!!!

Comments

Popular posts from this blog

Paarthavudan Vizhundhen

Unnai kanda nodi manadhil aazhamaga otti kondadhu... Un vaasanai en mel patta podhu en udalum manathadhu...  Un vizhigalil en vizhigalai kanda podhu asaivugal illamal dhegam uraindhadhu... Nee yaaro? Dhevadhaiyo? Andha iraivanin amsamo?  En kaadhali aavayo? En thunaiviyaai maaruvayo? Mudhal naal mudhal murai unnai kandadhume kaadhal konden en anbe... Un kangala? Idhazhgala? Imaigala? Punnagaiya? Theriyavillaye penne... Edhu un mel kaadhal kolla cheidhadhu puriyavillaye..                                   - Nithyasree Gururajan 
Kannanin Raadhai