சொல்லாமல் சொல்கிறான்
திருமணம். ஒவ்வொரு பெண்ணிற்கும் பெரிய மாற்றத்தை அளிக்கும் ஒரு சம்பவம்.விரும்பி ஏற்றுக்கொண்டால் வாழ்வே அழகாக மாறும். ஆனால் வெறுப்போடு சம்மதித்தால், வாழும் அந்த ஒவ்வொரு நிமிடமும் நரகத்தை போலே மாறிவிடும்.
லீலா, என் பெயர். 21 வயதில் என் விருப்பம் இல்லாமல் எனக்கு திருமணம் நடந்தது விட்டது. என்னை பொல் வேறு பல பெண்களுக்கும் இவ்வாறு நடந்திருக்கும். BSC(CS) படித்து முடித்து விட்டு, வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். செல்ல ஆரம்பித்து 3 மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் வீட்டில் திருமணம் பற்றி பேச தொடங்கினார்கள். இப்போது எனக்கு வேண்டாம் என சொல்லியும் கேட்கவே இல்லை. ஜோதிடம், ஜாதகம் என்ட்ரெல்லாம் சொல்லி, என்னை சம்மதிக்க வைத்து விட்டார்கள். அவசர அவசரமாக நிச்சயம் நடந்தது. இரண்டு மாதங்களில் கல்யாணமும் நடந்து விட்டது. திருமணதிற்கு முன்பு, அவனோடு, அதாவது என் கணவனோடு பேசி பழக கூட எனக்கு நேரம் கிடைக்க வில்லை. உண்மையாக சொன்னால், எனக்கு சிறிது அளவு கூட இஷ்டம் இல்லை. அவன் என்னோடு பேச முயற்சித்தால் கூட நான் அதற்கு பதில் அளிக்கவே இல்லை. திருமணம் ஆகிய பின்பும் கூட அவனோடு நான் பேசவே இல்லை. தினமும் காலையில் இருவரும் எழுவோம். முதலில் நான், பின்பு அவன். தனியே இருவரும் காபி குடிப்போம். நான் இருவருக்கும் சேர்த்தே சமைப்பேன். அவன் 8:30 க்கே ஆஃபீஸ் சென்றுவிடுவான். நான் 9:30 க்கு புறப்படுவேன். இருவரும் ஒரு வார்த்தை கூட பேசி கொள்ள மாட்டோம். இரவும் அப்படியே தான் நடக்கும். தனி தனியே இரவு உணவவை சாப்பிட்டு விட்டு, தனி தனியே தூங்குவோம். ஓரே வீட்டில் இருவரும் இருந்தும், எங்கள் மனம் ஒன்றாகவில்லை. எங்கள் இருவருக்குள் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை என நான் நினைத்து கொண்டிருப்பேன்.
என் கனவுகளை நோக்கி நான் பயணித்து கொண்டிருக்கும் வேளையில் திருமணம் என்ற ஒன்று எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பிடிக்காத ஒன்றை எற்று கொள்வது அவளவு சுலபம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். எத்தனை நாள் இப்படி தனி தனியே எங்கள் வாழ்வை வாழ்வோம் எனவும் தெரியவில்லை.
என்றாவது ஒரு நாள் அவனே என்னுடன் பேசுவான், எங்கள் வாழ்வும் மற்றவர்கள் பொல் அழகாக மாறும் என எதிர்பார்த்து கொண்டே இருந்தேன். மூன்று மாதங்கள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. இருவருக்கும் "ஈகோ" (ego), அதாவது "நான் என்னும் அகங்காரம்". அதனால், நானும் அவனோடு பேச முயற்சிக்கவே இல்லை.
ஆனால் எனக்கு திருமணம் தானே பிடிக்கவில்லை. அவனையுமா பிடிக்கவில்லை? எனக்கே ஒன்றும் புரியவில்லை!!!
தமிழ், என் உயிர் மூச்ச்சு. கவிதைகள் கதைகள் எல்லாம் எழுதுவதிலே என் பேரார்வம். எத்தனையோ காதல் கவிதைகளும் கதைகளும் எழுதி இருக்கிறேன். ஆனால் என் வாழ்வு ஏன் காதல், அன்பு, பாசம், நேசம் எதுவும் இல்லாமல் காய்ந்து போய் இருப்பதை நான் என்ன சொல்ல?? என் கனவே, என் காதல் கதையை ஒரு புத்தகமாக எழுதுவது தான். ஆனால் இன்று என் கனவும் நிறைவேறவில்லை. காதலும் வரவில்லை!
இதற்கிடையில், என் தோழி ப்ரியா வின் திருமணம் இருந்தது. அதற்கு நான் செல்ல வேண்டி இருந்தது. நான் சென்னையில் இருந்து கோவை வரை செல்ல, அவளே train இல் டிக்கெட் புக் செய்து விட்டாள்.
எல்லாவற்றையும் pack செய்து விட்டு, வெளிய வரும் முன், அவனை பற்றி ஞாபகம் வந்தது. அவன் phone number என்னிடம் இருந்தும், அழைத்து பேச ஏதோ ஒன்று என்னை தடுத்தது. ஒரு முடிவிற்கு வந்தேன். ஒரு சிறிய காகிதம் எடுத்து அதில் " I'm leaving to coimbatore today, I'll be back only on Thursday ." என எழுதிவிட்டு அதை மடித்து, காகிதத்தின் மேலே "Pls open it" என எழுதி , dining table இன் மெல் வைத்து விட்டு, கிளம்பினேன். 7 மணி நேரத்தில், CBE வந்து சேர்ந்தேன். தோழியின் வீட்டிற்க்கு சென்றேன். அவளை கண்டதும் என்னை அறியாமல் நான் அழுது விட்டேன். என் திருமண வாழ்வை பற்றி அவளிடம் சொன்னேன். அவளுக்கு என்ன, நேசித்த காதலனையே கணவனாக ஆக்கி கொள்ளும் தைரியமும், திறமையும் இருந்தது. ஆனால் எனக்கு காதலனும் இல்லை, கணவன் மீது காதலும் இல்லை. அவளின் இந்த சந்தோஷமான தருணத்தில் என் சோகங்களை ஏன் சொன்னேனோ என்று வருந்தினேன். ஆனால் அவளை கண்டதுமே என் கண்ணீர் அருவியை போலே கொட்டி தீர்த்து அவளிடம் காட்டி கொடுத்து விட்டது.
அன்று இரவு 9 மணி அளவில் என் phone இர்க்கு msg வந்தது.
Shivram : Happy and safe journey. Take care! :)
ஆச்சிறியம் கொண்டேன். என்ன பதில் அளிப்பது என தெரியாமல் தினறினேன்.
****** ***** ******
அவள் கனவுகள் நிறைவேறுமா??? இருவரும் இணைவார்களா??? எப்படி , எப்போது இருவரும் காதலை உணர போகிறார்கள்? பகுதி 2 இல் படிக்கலாம். Stay tuned

Comments