பிரிந்தும் நீ அருகில்
Vishali : No Arun! This won't work out. Let us end this here. நான் உனக்கு சரி வர மாட்டேன். உன்ன மாதிரி எல்லாமே என்னால casual'ah எடுத்துக்க முடியாது.
Arun : ஓஹோ! அப்போ நான் serious'ஆஹ் இல்லன்னு சொல்றியா? ரொம்ப நல்லது. அப்டியே வெச்சுக்கோ. I don't care. போ. இங்க இருந்து போயிடு. இனிமேல் என் மூஞ்சிலயே முழிக்காத. Go away.
Vishali : Good bye Arun! Thanks for everything.
என்று கோபத்தோடு சொல்லிவிட்டு, கண்ணீரோடு என்னை விட்டு, என்னை விட்டு சென்று விட்டாள் அவள்!
மூன்று வருடங்கள் முன்பு ஓர் அழகிய காலை பொழுது. மிதமான வெப்பநிலை, தழுவும் தென்றல் காற்று, ரோஜா செடிகள் நிறைந்த ஒரு தோட்டத்தில் விந்தையான ஒரு முகம்போல் அவள் தோன்றினாள். வார விடுமுறை நாட்களில் நான் நூலகம் செல்வது வழக்கம். அன்றும் அதேபோல் சென்றிருந்தேன். புத்தகத்தை விட்டு கண்களை அசைய வைத்து தலையை உயர்த்தி பார்க்க வைத்தது அவள் வாசம்.
இதுவரையில் இரண்டு பெண்களை நான் காதலித்து பிரிந்து சென்றிருந்தாலும், இவள் எனக்கு தனியாக தெரிந்தாள். மற்ற இரண்டு காதலில் நான் உண்மையாகவும் நேர்மையாகவும் இல்லை. நேரத்தை கழிக்க எனக்கு ஒரு உறவு தேவைப்பட்டது. அவ்வாறு தான் இருந்தது காதல் எனக்கு. உண்மையான காதலிலும் திருமணத்திலும் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. வாழும் வரை எனக்காக மட்டும் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்னைப் பற்றி நானே தவறாக சொல்வதாக தோன்றும், ஆனால் இதுதான் உண்மை. காதலில் நான் ஒன்றும் நேர்மையாக இல்லை. தொடர்ந்தால் தொடரட்டும் இல்லையெனில் பிரிவதற்கு நான் தயாராகத்தான் இருந்தேன். என்னை காதலித்த இரு பெண்களும் அவ்வாறு தான் இருந்தார்கள் போல, ஏனெனில் பிரிவதை அவர்களும் பெரிதாக கருதவில்லை. அந்த இரு காதலும் அறியாத வயதில் நானாக தேடி சென்ற ஒன்று. ஆனால் இவள் அவ்வாறு இல்லை. ஒரு வினாடி பார்வையில் என்னை சிறை அடைத்தாள். நூலகத்தில் என் எதிர் மேஜையில் உட்கார்ந்து புத்தகத்தை படிக்கத் துவங்கினாள். இதை சொன்னால் என்னை பற்றி நானே புகழ்ந்து பேசுவதாக இருக்கும், ஆனாலும் பரவாயில்லை நான் சொல்கிறேன். பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி நான் ஒரு நல்ல மாணவன் என்றே பெயர் எடுத்தேன். நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவன் கூட. அந்தப் பழக்கம் மட்டும் என்னை விட்டு செல்லவே இல்லை. ஆகையால்தான் விடுமுறை நாட்களில் நூலகம் செல்வது வழக்கமானது.
எப்போதும் புத்தகத்தை விட்டு கண்களை நகர்த்தாமல் மனதை ஒரு நிலைப்படுத்தி வாசிப்பேன். ஆனால் இன்று அதை சுக்குநூறாக உடைத்து விட்டாள். ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை விட்டு கண்களை எடுக்கவே முடியவில்லை.
"எளிமை" - அவளை விவரிக்கும் ஒரு வார்த்தை. நடையிலும் உடையிலும் அழகிலும் சிரிப்பிலும் எளிமையாக இருந்தால் அவள். அந்த எளிமை தான் அவள் அழகோ? நீல நிற skrit'um சிவப்புநிற top'um அணிந்திருந்தாள். அழகு சாதன பொருட்கள் சிறிதும் கூட இல்லை அவள் முகத்தில். புருவங்கள் இணையும் இடத்தில் ஒரே ஒரு சிறிய பொட்டு. இதமாக அழகாக புன்னகைத்தாள். அதுதான் "அவள்". தைரியமான, துணிவான பெண்ணாகத்தான் தெரிந்தாள் அவள். எப்படியாவது இன்று அவளோடு பேசிவிட வேண்டும் என்று நினைத்தேன். இரண்டு மணி நேரத்திற்குப் பின் புத்தகங்களை திரும்ப கொடுத்துவிட்டு எழுந்து வெளியே சென்றாள். அவளை நானும் பின் தொடர்ந்தேன். கொஞ்சம் தூரம் அவ்வாறே பின்தொடர்ந்தேன். அவள் என்னை பார்க்கவில்லை என்று நம்பினேன். பெண்களுக்குக்கு தான் பின்பும் கண்கள் இருக்கிறதே! திடீரென திரும்பி என்னை பார்த்தாள்.
Vishali : Hey! நீங்க ஸ்ரீனிவாஸ் uncle ஓட son தானே?
Arun : Mmm, yes. ஆனா, உங்களுக்கு எப்பிடி தெரியும்?
Vishali : உங்க அம்மாவும் என் அம்மாவும் friends தான், அடிக்கடி meet பண்ணி பேசிப்பாங்க. Recent'ah உங்க வீட்டுக்கு வந்திருந்தேன். நான் உங்கள பாத்தேன். But நீங்க என்ன பாக்கல.
Arun : வீட்டுக்கு வந்திங்களா? Sorry, எனக்கு தெரியல.
Vishali : Cool! நீங்க work போயிருந்திங்க. உங்கள நான் photo'la பாத்தேன். உடனே tension'ah?
Arun : Oh okay! But நான் உங்கள பாத்ததே இல்லையே?
Vishali : நான் கோயம்புத்தூர் ல படிக்கிறேன். Leave'kku இங்க வந்திருக்கேன். I'm doing MSc in PSG. It's my first year and this is mid sem holidays.
Arun : Ah, okay! I'm Arun Vignesh Working for Crystal IT solutions. Nice to meet you!
இருவரும் கை குலுக்கிக் கொண்டோம். அவள் என்னை முன்பே அறிந்ததை எண்ணி ஆனந்தம் கொண்டேன். நிச்சயமாக அவளோடு பேசி பழகி விடலாம் என்று எனக்குள் ஒரு நம்பிக்கை தோன்றியது.
Vishali : okayy, see you. Bye.
Arun : See you va? எப்போ?
Vishali : Mmm... Tmrw evening 5 o clock, விநாயகர் கோவில் பக்கத்துல இருக்கிற park'la?
Arun : 5 o clock? Okay sure bye!!
இத்தனை பேசியும் அவள் phone number கேட்க மறந்துவிட்டேனே! நாளை கேட்டுவிடலாம் என சுதாரித்துக் கொண்டேன்.
மறுநாள் மாலை 4:30 மணிக்கு அந்த பூங்காவிற்கு சென்று விட்டேன். இதுவரை உணராத புது உணர்வுகளை அவளால் உணர்ந்துகொண்டேன். அந்த அரை மணி நேரம் பல நாட்கள் போல் தோன்றியது. அவளுக்காக காத்திருந்த நேரத்தில் பல அனுபவங்களை பரிசளித்தாய். கைவிரல்கள் விருவிருக்க உதடுகள் தந்தியடிக்க கண்கள் மயங்க உள்ளம் நடுங்க, எத்தனை புது அனுபவங்கள்! தேவதை போலே அழகாய் நடந்து என்னை நோக்கி வந்தாள். புன்னகைத்துக்கொண்டே "Hi" என்றாள். அருகே வந்து அமர்ந்தாள். அவளோடு நான் இருந்த நிமிடங்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இப்படியெல்லாம் தோன்றினாலும், காதல், திருமணம் மேல் நம்பிக்கை இல்லாத நான் இந்த உறவையும் அலட்சியமாக தான் கருதினேன்.
இருவருக்கும் காதல் இருப்பது தெரிந்தும், "I love you" என்று சொல்லிக் கொண்ட பின்புதான் காதலர்களாக வாழ துவங்குவது வழக்கம். அதேபோல் ஒரு தருணம் எங்களுக்குள் நிகழ்ந்தது.
Arun : Vishali, I have to tell you something.
Vishali : சொல்லு Arun.
Arun : உன் மனசுல என்ன இருக்கு ன்னு எனக்கு தெரியல, but I wanted to be transparent in all my relationships.
Vishali : என்ன build up லாம் பயங்கரமா இருக்கு. சொல்லு சொல்லு சீக்ரம்.
Arun : I think, I'm in Love with you. ரொம்ப நாளாவே சொல்லணும்ன்னு இருந்தேன். It was Love at first sight in the library. உண்மைய சொல்லனும்னா, நேர்ல confess பண்ற அளவுக்கு தைரியம் இல்ல. But, I could feel something, some magic in your eyes. I was sure you also liked me. அதான் இப்போ சொல்லிட்டேன்.
Vishali : இதுக்கு நான் என்ன சொல்லனும்னு நீ எதிர் பாக்குற?
Arun : I know you like me. பொய்தான் சொல்லுவேனா அப்புறம் உங்க இஷ்டம்!
Vishali : You're so smart. Yes. I do like you. But, Love........
Arun : But??
Vishali : I have never had any relationship. லவ் பண்ணனும்னு கூட எனக்குத் தொணூனதே இல்ல. But, I feel something different with you. எப்பவுமே உன்கூட இருக்கணும் பேசணும்னு தோணுது. I think I have fallen in Love wid you. But to confess or to propose, எனக்கும் தைரியம் இல்ல.
Arun : I really knew that. I'm very much happy dear.
Vishali : எந்த காரணத்துக்காகவும் உன்னை miss பண்ணிடக் கூடாதுனு நினைக்கிறேன். I'll never loose you. Love you!
இவ்வாறு தான் எங்கள் காதல் சிறகடிக்க துவங்கியது. சுதந்திரமான இரு ஏகாந்த பறவைகள் போல் காதல் வானில் சுற்றித் திரிந்தோம். அவ்வப்போது புயல் வீசியது, தடைகள் தோன்றியது. ஆனால், அவள் அதை எல்லாம் உடைத்து எறிந்துவிட்டு தாய் போல என்னைப் பாதுகாத்து, வானில் என்னோடு ஆனந்தமாய் பறந்து கொண்டிருந்தாள். ஆனால் நானோ அந்தப் பயணத்தை அலட்சிய படுத்தினேன். பலமுறை அவளை காயப் படுத்தினேன். சிறிய சண்டை வந்ததும் என்னை வெறுத்து, என்னை பிரிந்த என் முன்னாள் காதலிகளுக்கு இவள் நேர்மாறாக தெரிந்தாள்.
Vishali : Hi!
Arun : சொல்லு விஷாலி என்ன பண்ற?
Vishali : I want to tell you something.
Arun : What? ஏதாவது நல்ல விஷயமா?
Vishali : இல்ல அருண், இத பத்தி நம்ம இதுவரைக்கும் பேசினது இல்லைன்னு நினைக்கிறேன். But, பேசணும்னு தோணுச்சு இன்னிக்கி. It's not to irritate you or disappoint you. Just wanna share wid you.
Arun : இழுக்காத, சீக்கிரம் விஷயத்துக்கு வா, சும்மா நை நைன்னு.
Vishali : அருண், ஏன் இப்படி பேசுற, என்ன ஆச்சு? ஏதாவது வேலையா இருக்கியா? நான் வேணும்னா அப்புறமா call பண்றேன்.
Arun : அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ சொல்லு.
Vishali : No. This is not the time to talk about it. விடு. We'll talk some other day.
Arun : நீ இப்ப சொல்ல போறியா இல்லையா? உனக்கு என்னதான் பிரச்சனை?
Vishali : நீ இப்போ எதுக்கு இவ்வளவு கோவப்படுற? நான் cut பண்ற. Bye!
Arun : Hello, Hello Vishali.... Sorry மா! கொஞ்சம் tension. Ippo all okay. நீ சொல்லுடா.
Vishali : இப்போலாம் நீ ரொம்ப கோவப்படுற அருண். நான் ஒண்ணுமே பண்ணலனாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுற என் மேல. எனக்கு ஒண்ணுமே புரியல.
Arun : அப்டி எல்லாம் ஒன்னும் இல்லம்மா, ஏதாவது work tension இருக்கும். that's all. Intentionally, நான் உன்னை திட்டி இருக்க மாட்டேன். சரி okay. எல்லாத்துக்கும் sorry. இப்போ நீ சொல்ல வந்தத சொல்லு.
Vishali : Days are going fast. It's more than two years now, after we both entered into the relationship. எனக்கும் வயசு ஆகுது. உனக்கும்தான். I think it's time to marry, dear. I want you near me all the time.
Arun : What? Marriage? என்ன அவசரம் இப்போ?
Vishali : You know what, I'm 24 and you're 27. வீட்டில் எந்த talk'um start பண்ணாத வரைக்கும் நான் safe. Once they start, I can't do anything. என்ன பொறுத்த வர, Love and marriage are not different. Love பண்ணவனதான் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறவ நான். And I don't wanna lose you at any cost.
Arun : இப்போ என்ன அவசரம்ன்னு தான் கேட்டேன். தேவை இல்லாத explanation கொடுக்காத, okay?
Vishali : எது அருண் தேவையில்லாதது? Don't be silly. கொஞ்சம் matured'ah think பண்ணு. It's our life, our future. Please think about it.
கெஞ்சினாள் கதறினாள். நானோ காதிலேயே வாங்கவில்லை. திமிரோடும், ஆனவதோடும், அவளை ஏசினேன். திருமணம், கல்யாணம், Marriage, family, future. இதைப் பற்றி மட்டுமே பலநாட்கள் பேசினாள் அவள்.
அவளுடைய தவிப்பை உணர முடியாத நிலையில் நான் இருந்தேன். என்னோடு பேசி எனக்கு புரிய வைத்து வைத்து அவள் நேரத்தையும் பொறுமையையும் இழந்து கொண்டே வந்தாள். அன்று ஏன் என் மூளை வேலை செய்யவில்லை என தெரியவில்லை. திருமணம் பற்றி இருவருக்கும் மாற்று கருத்தே இருந்தது. அவளை விலகவும் மனம் இல்லை, மணம் முடிக்கவும் தைரியம் இல்லை. அவள் ஹைதராபாதில் வேலை பார்த்து வந்தாள். நான் என் சொந்த ஊரிலேயே என் வேலையைப் பார்த்து வந்தேன். ஆகையால், நேரில் பார்த்து பேசிக் கொள்ள சில சந்தர்ப்பங்களே கிடைத்தன. என் கோபம் தாபம் ஆசை திமிர் ஆணவம் கர்வம் பொறுமையின்மை அலட்சியம் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு என்னை புதிய ஒருவனாய் மாற்ற போராடி திண்டாடி சென்றால் அவள்.
எல்லாம் கையை மீறி சென்ற அந்த ஒரு இரவு தொலைபேசி உரையாடல்!
Vishali : Hi, Arun! Busy'ah இருக்கியா?
Arun : இல்ல, என்ன விஷயம்?
Vishali : ஒன்னும் இல்ல சும்மாதான். உன் குரல கேக்கணும் போல இருந்துச்சு. அதான் call பண்ணேன்.
Arun : Oh! நான் வேணும்னா record பண்ணி send பண்ணவா? எப்போ வேணா நீ கேட்டுக்கலாம்.
Vishali : Okayyy. But one condition.
Arun : என்னது?
Vishali : பாடி record பன்னி send பண்ணு.
Arun : Hey, அதெல்லாம் முடியாது.
Vishali : Please, please, நீ பாடி நான் கேட்டதே இல்ல. Please, பாடு எனக்காக.
Arun : என்ன விளையாடுறியா? எனக்கு பாட தெரியாதுடி.
Vishali : எரும, சும்மா try பண்ணு. Please, எனக்காக.
Arun : சரி இரு, try பன்னி தொலைக்கிறேன்.
" வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா, விளையாட ஜோடி தேவை... இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்!"
Vishali : Haaaaahhhhhaaaaa.... ஐயோ! இதுக்கு நீ பாடாமலே இருந்திருக்கலாம்.
Arun : என்ன நக்கலா? அதான் அப்பவே சொன்னேன்.
Vishali : இப்படி எப்பவுமே சந்தோஷமா ஒண்ணா ஒரே வீட்டுல நீயும் நானும் இருக்கணும்னு அவ்ளோ ஆசையா இருக்கு. அது சீக்கிரமா நடக்கணும்னு நான் கடவுளை வேண்டுகிறேன் daily. There's nothing in the world to measure how much I love you. Love you to the moon and back!
Arun : Mmmm....
Vishali : 40 years கழிச்சு, இதே பாட்டை நீ நம்ம grand children'kku பாடி காமிப்ப. எப்படி இருக்கும் அப்போ!! மூஞ்சி எல்லாம் சுருங்கிப் போய் முடி எல்லாம் நரைத்துப் போய் நான் இருப்பேன். மீசை நரைச்ச போயி தாடி நரைத்து போயி ஒழுங்கா பேசக்கூட முடியாம நீ இருப்ப. But, அன்னைக்கு நம்ம Love'la எந்த change'um இருக்காது. I'm waiting to experience the world through your eyes.
Arun : பேசுறதுக்கு எல்லாம் நல்லாதான் இருக்கு. But, கொஞ்சம் practical'ah think பண்ணி பாரு. Marriage, children, finance, responsibilities, commitments... அப்பப்பா.... நினைச்சாலே பயமா இருக்கு. இப்படியே casual'ah happy'ah jolly'ah இருந்தா என்ன?
Vishali : Arun?? எல்லாம் புரிஞ்சு தான் பேசுறியா? எண்ணிக்கா இருந்தாலும் எல்லார் life'layum இதெல்லாம் நடந்துதான் தீரும். இதுக்கு ஏன் பயப்படுற? This is a part of our Life dear. More than all that, நான் உன் கூட இருக்கேன், ஏன் பயம்?
Arun : நான் நல்லா யோசிச்சு தான் பேசிட்டு இருக்கேன். I cannot take any responsibility or take up any commitment. You first understand that.
Vishali : What do you mean by that? Arun.... I really Love you. I want you to be wid me forever. Be serious.
Arun : உடனே அழாத. நான் serious'ah தான் பேசிட்டு இருக்கேன். I don't want any responsibilities or commitments. okay? You understand!
Vishali : ok I understand! I'll be coming there they after tomorrow. Meet பண்ணி பேசலாம். Until then, bye. Good night!
முதல்முறை அவளோடு பழகிய அந்த விநாயகர் கோவிலுக்கு அருகே உள்ள பூங்காவிற்கு வரச்சொன்னாள். நான் செய்வது தவறு என மனதிற்கு விளங்கியும் என் மூளை அதை ஏற்க மறுத்தது. மூன்று வருடம் முன்பு அவளை சந்தித்த அந்த நொடி இன்னும் நினைவில் இருக்கிறது மூன்று வருடங்கள் சென்றதே தெரியவில்லை. அவள் அன்பு அவ்வாறு இருந்தது. அவள் காதல் என்னை மாற்ற முயற்சித்தது. ஆனால் நானோ, எல்லாவற்றையும் அலட்சியப் படுத்தினேன். அன்று பார்த்த அவள் தான் இன்றும் என்னை நோக்கி நடந்து வருகிறாள். அன்று இருந்த தெளிவும் தேஜஸும் இன்று அவள் வதனத்தில் இல்லை. துவண்டு போய் இருந்தாள்.
Vishali : Hi Arun. எப்படி இருக்க? Sorry, கொஞ்சம் late ஆயிடுச்சு.
Arun : It's okay. I'm good. நீ?
Vishali : Mmm... இருக்கேன்.
மௌனத்தில் சில நிமிடங்கள் கழித்தோம்.
Vishali : So, you're sure about what you said? Marriage வேண்டாம்னு சொல்றியா?
Arun : வேண்டாம்னு சொல்லல, but இப்போ வேண்டாம்னு சொல்ற.
Vishali : இப்ப வேண்டாம்னா எப்போ?? வீட்ல நான் என்ன சொல்லுவேன்? என்ன பத்தி நீ யோசிச்சு பாத்தியா அருண்?
Arun : நீ தான் manage பண்ணனும் உன் வீட்ல. You said you truly Love me right?
Vishali : What the hell are you saying? கொஞ்சமாவது என்ன பத்தி யோசிச்சு இருந்தண்ணா, நீ இப்படி பேச மாட்ட. You're so selfish.
Arun : நான் selfish'ah இருக்கேனா? நமக்குன்னு ஒரு வாழ்க்கை வாழ்க்கைன்னு நீதான் selfish'ah பேசிட்டு இருக்க. I have 0% belief in this stupid marriages. நமக்காக வாழ்வது தான் நம்ம வாழ்க்கை. மத்தவங்களுக்காக இல்ல. புரிஞ்சுக்கோ!
Vishali : You're 100% right, Okay, enough! நீ உன்ன பத்தி மட்டும் யோசி, உனக்காக நீ வாழ், நான் எதுவும் சொல்லல. I'm leaving bye.
Arun : Vishali, please wait a minute.
Vishali : No Arun! This won't work out. Let us end this here. நான் உனக்கு சரி வர மாட்டேன். உன்ன மாதிரி எல்லாமே என்னால casual'ah எடுத்துக்க முடியாது.
Arun : ஓஹோ! அப்போ நான் serious'ஆஹ் இல்லன்னு சொல்றியா? ரொம்ப நல்லது. அப்டியே வெச்சுக்கோ. I don't care. போ. இங்க இருந்து போயிடு. இனிமேல் என் மூஞ்சிலயே முழிக்காத. Go away.
Vishali : Good bye Arun! Thanks for everything.
என்று கோபத்தோடு சொல்லிவிட்டு, கண்ணீரோடு என்னை விட்டு, என்னை விட்டு சென்று விட்டாள் அவள்!
என்னை விட்டு அவள் சென்று ஒரு வருடம் ஆகிறது. ஆனால் அவள் தந்த நினைவுகளோ, விட்டு செல்ல மறுக்கிறது. அவள் கற்பித்த பாடங்கள் என்னை மாற்ற முயற்சி செய்கிறது. அவள் காதல் என் உதிரத்தில் கலந்து என்னை பிரிய மறக்கிறது. இதுதான் வாழ்க்கை என்று சுற்றி திரிந்து கொண்டிருந்தேன். இது வாழ்க்கை அல்ல நான் காண்பிக்கிறேன் வாழ்க்கை என்றால் என்னவென்று எனக் கூறி என்னை அவளோடு இழுத்து சென்று பாதியிலேயே என்னையும் விட்டு சென்று விட்டாள் அவள்.
" அருகில் இருக்கையில் அருமை தெரிவதில்லை" அவள் இல்லாத ஒவ்வொரு கணமும் நரகத்தை உணர வைக்கிறது. அவள் தவறு இதில் எதுவும் இல்லை என நான் அறிவேன். எத்தனை காலம் என்னோடு அவள் போராடுவாள்? எத்தனை காலம் நான் மாறி விடுவேன் என அவள் காத்திருப்பாள்?
தவறை எல்லாம் என்னிடம் வைத்துக் கொண்டு அவளை ஏசினால் என்ன அர்த்தம்? அவளால் தான் வாழ்வையே நான் புரிந்து கொண்டேன். அவளோடு வாழ தான் கொடுத்து வைக்கவில்லை எனக்கு. அவள் நினைவுகளோடு வாழ்கிறேன் நான். ஒரே வீட்டில் இருவரும் ஆனந்தமாய் ஈருடல் ஓருயிராய் இருப்பதை பற்றி அவள் கூறியது தான் நினைவிற்கு வருகிறது.
அன்று அவள் என்னிடம் யாசித்தாள். இன்று அவளிடம் நான் யாசிக்கிறேன்.
"என்னை ஒளித்துவிடு உன்னுள்ளே, மறைந்து கொள்கிறேன் உன் புடவை முந்தானையின் உள்ளே
என்னை மாற்றிவிடு உன் பார்வையாலே, வாழ நினைக்கிறேன் ஒரு மனிதனாக உன் அன்பாலே!
கண்கள் திறந்தால் நீ தோன்ற வேண்டும், என் கைகளில் நீ சேர வேண்டும்
உன் அருகே நான் கரைய, என் தீண்டலில் நீ உறைய, நிலவும் தென்றலும் நம்மை கண்டு வெட்கம் கொள்ள
உன் ஸ்பரிசத்தில் நான் மயங்கி விட, வெட்கத்தில் நீ கண் மூட, இந்த இரவே நம்மை கண்டு பொறாமை கொள்கிறதே!"
- கண்ணீரோடு, Arun Vignesh
*******************
அற்புதங்களை அலட்சியப்படுத்திகிறோம். ஆணவத்தை ஆதரிக்கிறோம். தவறு என தெரிந்தும் செய்ய துணிகிறோம். அனால், அது ஏன் என்பதை யாரும் யோசித்துக்கூட பார்ப்பதில்லை. விரும்புவது விரும்பிய நேரத்தில் கிடைப்பதில்லை. வெறுப்பது மாட்டும் நம்மை பின் தொடர்கிறது. வாழ்க்கை நாம் நிச்சயப்பதில்லை. வாழ்க்கையே ஒரு வரம் தான். அனால் அதை யாரும் உணருவதில்லை. அதை உணர்த்த வருபவர்களையும் நாம் ஏற்பதில்லை. சுயநலத்தில் நமக்காக வாழும் வாழ்க்கையை விட பிறருக்காக வாழ்ந்து பார்த்தல் மட்டுமே அது எவ்வளவு அழகு என்பது புரியும்.
Comments