Skip to main content

வழித்துணையே - Part 1

 VAZHITHUNAYE

 அழகிய இரவு நேரம், நிறைமதியின் ஒளி வீசும்  வசீகரத்தில் மயங்கி அருகே சின்ன சின்னதாய் ஜொலிக்கும் விண்மீன்களை ரசித்துக்கொண்டிருந்தாள்.  காண ஆயிரம் கண்கள் வேண்டும் என அவளுடன் அவளே பேசிக் கொண்டாள். அவள் தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு அவள் கைபேசியில் social media வை scroll செய்து கொண்டிருந்தாள். அன்று சிறிது வேலைகள் அதிகமாகவும் நேரம் இக்கட்டாகவும் இருந்தது அவள் அலுவலகத்தில். ஆகையால், மனதை அமைதி படுத்த மொட்டை மாடிக்கு சென்று இயற்கையின் அழகில் அவளையே மறக்க தயாரானாள். WhatsApp இல் status ஐ scroll செய்து கொண்டிருந்தாள். அப்போது "விஷ்ணு ராஜ்" என்று அவள் contact இல் இருந்த ஒருவரின் status ஐ கண்டாள். அவன் "Off to Chennai for my uyir nanban's kalyanam" என்று ரயிலின் புகைப்படத்தை status ஆக post செய்திருந்தான். 


Vishnu Raj,  அவளுடைய தோழியின் நண்பன். அவர்களை விட வயதில் பெரியவன் ஆனாலும் அவர்கள் இருவருக்கும் நண்பன் போல் தான் இருப்பான். அவளுக்கு சில நாட்களே பழக்கப்பட்டவன், ஆனால் அவள் தோழி அபிராமியின் நெருங்கிய நண்பன். அன்பானவன், பணிவானவன், எல்லோருக்கும் பிடித்தவன் ஆனால் கோபக்காரன். மிக எளிதில் கோபம் வந்துவிடும் அவனுக்கு.


 அவன் statusஐ கண்டவுடன் reply செய்தாள்.


Deepika : Hey, at Chennai?


Reply செய்து விட்டு சில நிமிடங்கள் Instagram feeds scroll செய்து கொண்டிருந்தாள். அரைமணிநேரம் கழித்து அவளுக்கு விஷ்ணுவிடம் இருந்து reply வந்தது. 


Vishnu Raj : Hey, yeah! how're you?

Notification இல் அவன் பெயர் pop -up ஆனதும் அவன் text ஐ open செய்து படித்தாள். ஏன் என்று தெரியவில்லை, இத்தனை நாட்கள் பழகியிருந்தும் இன்று ஒரு வித உற்சாகமும் ஆர்வமும் இருந்தது அவளுக்கு.

"I'm good. How about you??" என்று reply செய்தாள். அவள் மிகவும் நேசிக்கும் ஒரு நபரிடம் முதல் முறை பேசுவது போல் அவளது செயல்கள் இருந்தது. ஏன் இந்த அளவு ஆவலாகவும் உற்சாகமாகவும் இருந்தாள் என அவளுக்கே விளங்கவில்லை. முன்பே பேசி பழகிய ஒரு நபரிடம் ஏன் திடீரென இவ்வாறு உணர்வுகள் தோன்றுகிறது என் வியந்தாள்.


VR : I'm good too. How's your Life?

Deepika : It's going well. How many days in Chennai?

VR : Hope will be there here for four more days. Still not decided. By the way, are you here @Chennai?

DP : Yeah, I work here.

VR : Oh! IT?

DP : Yaa, I work for Wipro.

VR : Great! Good to hear.

DP : Then, what abt u? What are you doing at present?

VR : You know right? I wanted to start my own firm?

DP : Yeah I do remember, what happened to those plans?

VR : Those dreams came true and I have started my own event management services.

DP : Wow, that's great. Congratulations CE Mr. Vishnu Raj😇!

VR : Thanks a ton, Ms. Deepika Ravishankar!☺️

DP : What, you remember my dad's name?😳

VR : Yeah I do. என்னோட CPUக்கு RAM அதிகம்.😜

DP : Haha, very funny 🤦🏻‍♀️ சிரிப்பே வரல...பேசி எவளோ நாள் ஆச்சுல்லா... almost 3 years இருக்கும்.

VR : ஆமா,ரெண்டு பெரும் each other ஓட contacts ல இருந்தும் இவளோ நாள் பேசாம இருந்துருக்கோம். But thats okay , நானும் பேசல நீயும் பேசல, mutual 😅

DP : Yeah, mutual.. so no complains!! அப்ரம், friend க்கு கல்யாணம் னு வந்திருக்கீங்க.. நீங்க எப்போ கல்யாண சாப்பாடு போடா போறீங்க CEO?😄

VR : போடலாம் போடலாம், அதுக்கெல்லாம் ஒரு நேரம் காலம் வரணும் 

DP : இன்னும் எத்தனை வருஷம் இதையே சொல்ல போறீங்க 

VR : அது நடக்கும் போது நடக்கட்டும். அது தான் நல்லது, சேரி அது விடு, உனக்கு எப்போ? நீ சொல்லு மொதல்ல 

DP : இன்னும் one year ஆகும் நெனைக்கிறேன் , இப்போதைக்கு எந்த பேச்சும் எடுக்கல, அது வர சந்தோஷம்.

VR : good good. first நீ கல்யாண சாப்பாடு போடு 😁

DP : பாக்கலாம். எப்போ marriage friend க்கு?

VR : Tmrw reception, day after முஹூர்த்தம். அப்புறம் அப்டியே ஒரு 2 days இருந்துட்டு ஊருக்கு போலாம்ன்னு  இருக்கேன்.

DP : Oh, nice nice. நா ஊருக்கு போயி 2 months ஆச்சு. this week போலாமா ன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

VR : Oh, okay okay. Sat Sun off தான?

DP : Ya, so friday night கிளம்பலாம்ன்னு ஒரு plan, பாக்கலாம்.

VR : Free ஆ இருந்தா சொல்லு, let us meet one day.

DP : Sure, CEO of a reputed company யே கூப்பிடும் போது நா எப்படி முடியாது னு சொல்ல முடியும்?😉

VR : முடியாதுன்னா முடியாது னு சொல்லலாம்.

DP : I see😂 . Meet பண்ணலாம், one evening when both of us are free.

VR : Sure madam.


இதற்க்கு பின்பு என்ன பேசி உரையாடலை தொடர்வது என்று அவளுக்கு தெரியவில்லை. உறையாடலை அமைதியாக முடித்து விட்டபின்பும் அவனை பற்றிய எண்ணங்கள் அவள் மனதில் ஓடிக்கொண்டே தான் இருந்தது. புது விதமான எண்ணங்களும் தோன்றியது. "என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே, அது என்னென்று அறியேனாடி" என இருந்தது அவள் நிலை அப்போது. உதட்டில் சிறு புன்னகையோடும் உள்ளூர ஒரு வெட்கத்தோடும் உறங்க சென்றாள். அப்போது அவள் phone இல் ஒரு notification வந்தது. உடனடியாக எடுத்து lock ஐ open செய்து பார்த்தாள். "Good Night ! See you :) " என்று அவனிடமிருந்து ஒரு whatsapp text வந்திருந்தது. மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.உடனே open செய்து "Good night sweet dreams" என்று  reply செய்தாள்.


அடுத்த நாள் காலை படுக்கையில் இருந்து எழுந்து சோம்பலை முறித்துவிட்டு, அவள் கைபேசியில் நேரம் பார்த்தாள். மணி 6:12am என்று காட்டியது. அவளுக்கு பல message இருந்தது mobileஇல். அனால், அவள் கண்கள் தேடியதோ Vishnu Raj என்கிற பெயரை தான். அவளை அறியாமலேயே தேடினாள் அவன் பெயரை. "Good morning, Have a nice day!" என்று ஒரு text அவனிடமிருந்து வந்திருந்தது. உடனே அவன் chat இருக்குள்ளே சென்று "Good Morning " என்று reply செய்தாள். வேறு என்ன பேசுவது என்றே அவளுக்கு தெரியவில்லை. பின்பு மற்ற chatஐ எல்லாம் படித்துவிட்டு அலுவலகம் செல்ல தயாராகினாள். அன்றும் அலுவலகத்தில் வேலைகள் அதிகமாகவே இருந்தது. ஆகையால் அவள் வீடு திரும்ப 7 மணி ஆகிவிட்டது. அறைக்கு வந்து ஓய்வு எடுத்திட்டு, இரவு உணவை உண்டுவிட்டு, அவளோடு அறையில் இருந்த தோழியுடன் பேசிக்கொண்டிருந்தாள். அப்போது தான் Vishnuவின் ஞாபகம் அவளுக்கு வந்தது. அவள் mobileஐ எடுத்து whatsappஐ open செய்து அவனிடமிருந்து ஏதாவது text வந்திருக்கிறதா என்று ஆவலோடு பார்த்தாள். அனால், ஒன்றும் வரவில்லை. இவள் அனுப்பிய "Good morning" messageஐ அவன் பார்த்திருந்தான், ஆனால் reply செய்யவில்லை. ஏமாற்றம் அடைந்தாள். அவள் முகம் வாடியது. அனால் அதில் எந்த நியாயமும் இல்லை என்பதும் அவள் அறிவு அவளுக்கு பாடம் எடுத்தது. எதிர்பார்ப்பது என் தவறு தான் என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டாள். ஆனாலும் அவள் மனம் கேட்கவில்லை. அவள் தோழி (roommate) Mithra அவளை பார்த்து என்ன நேர்நதது என்று கேட்டாள்.


Mithra : என்னாச்சு? phone 'ah எடுத்ததும் மூஞ்சியே மாறிடுச்சு. ஏதாவது problem 'ah?

DP : problem லாம் இல்லடி, expect பண்ண ஒரு விஷயம் நடக்கலைன்னா disappoint ஆகும்ல அப்டி தாண்டி இதுவும். விடு நானே கொஞ்ச நேரத்துல சரி ஆயிடுவேன்.


அவள் தோழியிடம் கூட சொல்ல முடியாத அளவுக்கு ஒரு "silly matter" ஆக இருந்தும் கூட அவள் மனது அதை ஏற்க மறுத்தது. அப்போது அவனுடைய status இல் அவன் புகைப்படத்தை கண்டாள். அவன் நண்பனுடைய reception photoவை share செய்திருந்தான். அதை பார்த்ததும்  தான் அவன் சிறிது busy ஆக இருப்பான் என்று உணர்ந்தாள். அவன் statusஇல் வைத்திருந்த அந்த திருமண வரவேற்பு புகைப்படதிற்கு, "Nice pic 🥰" என்று reply செய்தாள். அவள் கவனத்தை மாற்ற Insta feedsஐ பார்க்க ஆரம்பித்தாள். ஆனாலும் அவள் கவனம் முழுவதும் எப்போது reply வரும் என்று எதிர்பார்ப்பதிலேயே இருந்தது. அனால் அவனோ அவனை அறியாமலே அவளை காக்க வைக்க விரும்பவில்லை. ஓர் இரு நிமிடங்களில் "Thank you da"🤗 என்று பாசமாக reply செய்தான்.


அவள் கன்னங்கள் சிவக்க, உதடுகள் புன்னகையால் விரிய, கண்களில் ஒரு காதல் அப்போதே தெரிந்தது. தீபிகாவை பற்றி விஷ்ணுவிடம் அபிராமி நிறைய பேசி இருக்கிறாள். பல கதைகளும் இவளுடன் நடந்த சம்பவங்களும் அவனுக்கு நன்றாகவே தெரியும். முன்பே இவனுக்கு அவள் மீது ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது. "Soft corner" என்று சொல்லலாம். தீபிகாவிற்கும் அபிராமிக்கும் இடையே ஏதாவது வாக்குவாதங்கள் நேர்ந்தால், அபிராமி விஷ்ணுவிடம் கூறுவது வழக்கம். அவனிடம் நியாயம் கேட்பாள். பல தருணங்களில் தீபிகா சொல்வது தான் சரி என்று இவனுக்கு தோன்றும். இது ஒரு விதமான அன்பு என்பது அவனுக்கு தெரியும் அனால் இது காதலா என்று புரியவில்லை. சிலரை காரணமே இல்லாமல் பிடித்துவிடும், இடையே என்ன உறவு என்பதும் தெரியாது. ஆணாலும் மிகவும் பிடித்தவராக இருப்பார்கள். அவ்வறாரு தான் தீபிகா இருந்தாள் விஷ்ணுவிற்கு. அந்த அன்பான அழகான "thank you" messageஇற்கு என்ன reply செய்வது என தெரியாமல் யோசித்தாள். "You're welcome😃" என்றாள்.


இவள் உணர்வுகளில் பாதி கூடவா அவனுக்கு இருக்காது? அவனும் இவளை போலவே தான் உணணர்ந்தான். அனால் அவள் இவனை தவறாக எண்ணிவிட கூடாது என்பதால் பேச தயங்கினான். ஆனாலும் அவளை காத்திருக்க வைப்பது இவனுக்கு பிடிக்கவில்லை. ஆகையால் உடனே reply செய்தான். 


VR : How was your day ?


அவன் உடனடியாக பதில் அளிப்பது இவளுக்கு பிடித்திருந்தது. இவளும் உடனே reply செய்தாள்.


DP : It  was a bit hectic. For you?

VR : ஐயோ, IT நாவே அப்படிதான் என்ன பண்றது? எனக்கு it was awesome. friend marriageல.

DP : Ya ya . enjoyed ah ?

VR : Yeah very well enjoyed. 

DP : Bachelor's party எதும் இல்லையா 🤭?

VR : Hehe. No no. Mrng early முஹூர்த்தம்.

DP : அப்போ early'ah இல்லனா இருந்திருக்கும், அப்படி தான?

VR : இருந்திருக்கலாம், but இருந்தா எனக்கு என்ன இல்லனா என்ன? எல்லாம் ஒண்ணு தான்😅.

DP : அடடா, நடிப்பு தான். நா என்ன உங்களுக்கு தெரியாதவளா, என்கிட்ட சொல்ல ஏன் இவளோ build up.

VR : தீபிகா, seriously இல்ல.. அந்த பழக்கம் லாம் clg ஓட விட்டாச்சு. Responsible ஆ இருக்கணும்ல. so quit பண்ணியாச்சு. நம்ம தளபதியே "குடிச்சது போதும்டா quit பண்ணுடா" ன்னு சொல்லிற்காரே.

DP : அது சரி, அவரு சொல்றது எல்லாத்தையும் கேக்கற மாறி தான்🤦🏻‍♀️.

VR : உண்மையா தான் டா.

DP : okay okay chill நம்புறேன்.

VR : Mmm .

DP : Then?

VR : Then 🤔? எப்போ meet பண்ணலாம்?

DP : Oh sorry , நா மறந்தே போயிட்டேன். நாளைக்கு eve நா கொஞ்சம் free. நீங்க?

VR : நாளைக்கு eve 🤔...... ya! mrng'eh marriage முடிஞ்சிரும், அதுக்கு அப்புறம் என்ன வெட்டி தான்.

DP : So, எங்க meet  பண்ணலாம்?

VR : நீ தான் இங்க இருக்க, உனக்கு தான் நெறய spots தெரியும். நீயே சொல்லு.

DP : உங்களுக்கு sholinganallur பக்கமா?

VR : Ya , I think so.

DP : அப்போ ECR beach okay வா ??  

VR : Beach ah, செம.

DP : Ya, I love beaches. To sit there and listen to the sound of the waves!! Beautiful it'll be😇

VR : That's actually peaceful too.

DP : True :)

VR : எப்படி வருவ? தனியாவா இல்ல friend ஓடவா, so that நா என் friend ah  கூப்பிடணுமான்னு தெரிஞ்சிக்கலாம்ல.

DP : I think friend என்ன drop பண்ணிட்டு போயிடுவான்னு நெனைக்கிறேன். so நீங்க தனியா வந்தாலும் okay தான். 

VR : okay okay. See you @5:30 PM @ECR beach, tomorrow😉 .

DP : See you too. Good night sweet dreams 

VR : Good night, take care🤗


அவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே அன்று இரவு உறங்கச் சென்றாள். நாளை அவனை சந்திக்கும் போது எப்படி இருக்க வேண்டும், எவ்வாறு பேச வேண்டும், என எல்லாம் ஒத்திகை பார்த்துக்கொண்டாள். படுக்கையில் அமர்ந்து கொண்டு அவள் whatsapp DPயில் இருந்த புகைப்படத்தை பார்த்து ரசித்தான் அவன். அன்று இரவு உறக்கமே வரவில்லை அவனுக்கு. இதுவரையில் யார் மீதும் அவனுக்கு இந்த அளவு அன்பும் நேசமும் இருந்ததில்லை. அவளை மிகவும் பிடித்தது அவனுக்கு. ஆனால் காதல் வரை எல்லாம் இருவரும் யோசிக்கவே இல்லை. இருவருக்கும் இருவரின் மேல் ஒரு அளவில்லா நேசம் இருப்பதை உணர்ந்து கொண்டார்கள். நட்பில் ஏன் இந்த நேசம் இருக்கக்கூடாது என அவன் சிந்தித்தான். இதுவரையில் எந்த ஒரு ஆணையும் இவளுக்கு இந்த அளவு பிடித்ததில்லை. ஒரு சிலர் இவளிடம் அவர்கள் காதலை வெளிப்படுத்தும்போது கூட இவள் பணிவோடு மென்மையாக நிராகரித்தாள். ஆகையால் இவள் மீது எவருக்கும் கோபமே வராது.


தீபிகாவின் அலுவலகத்தில் அன்று ஒரு கலை நிகழ்ச்சி நடக்க நேர்ந்தது. ஆகையால் மாலை சீக்கிரம் வந்துவிடலாம் என்று நினைத்து தான் விஷ்ணுவை சந்திக்க முடிவு செய்தாள். அலுவலகத்தில் இருந்து திரும்பி அறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு கொஞ்சம் refresh ஆகிவிட்டு அவனைப் பார்க்கச் செல்லலாம் என்று யோசித்தாள். அன்று அந்த கலை நிகழ்ச்சிக்காக புடவை கட்டியிருந்தாள். நிகழ்ச்சிகள் முடிவாக நேரமாகிவிட்டதால் அலுவலகத்தில் இருந்து நேராக ECR beachஇற்கு 5 மணி அளவில் சென்றால். அவனிடமிருந்து text வரும் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவள் பதட்டத்தையும் ஆவலையும் கட்டுப்படுத்த முடியாமல் இவளே அவனுக்கு கால் செய்து விட்டாள்.


DP : Hello!

VR : Deepika!!

DP : Hi, எங்க இருக்கீங்க?

VR : On the way da. ஒரு 10 mins ல வந்திருவேன்.

DP : Oh okok. பாத்து வாங்க. நா முன்னாடியே ஒரு டீ shop கிட்ட நிக்கிறேன். Reach ஆயிட்டு call பண்ணுங்க. 

VR : Okay Okay will call you.

DP : Okay, bye!


போனில் அவன் குரல் கேட்டதும் ஏதோ ஒரு இனம்புரியா ஆனந்தம் அவளுக்கு. அவனுக்கு இவள் குரல் தேன் போல் ஒலித்தது. உண்மையில் அவள் குரல் மிகவும் இனிமை தான். அழகாக பாடுவாள். அவள் பாடல்களால் பலர் மனதை ஈர்ப்பாள். அந்த குரலை முதல் முறை போனில் கேட்டால் யாருக்குத்தான் பிடிக்காது!

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் காத்திருந்தாள். பதட்டத்தோடு வழி பார்த்திருந்தாலள். சாலையை ஒரு நொடி பார்ப்பதும் அடுத்த நொடி அலைபேசியில் நேரம் பார்ப்பதும் அந்த 15 நிமிடங்கள் செய்து கொண்டிருந்தாள். அவனைப் பார்க்கவே வேண்டாம் என்று பதட்டம் ஒரு பக்கம், சீக்கிரம் சந்தித்துவிட வேண்டும் என்று ஆசை ஒரு பக்கம். குழப்பத்தில் தவித்தாள். அவள் கால் செய்யும்போது ECR பீச்சின் அருகே ஒரு ஸ்டேஷனரி ஷாப் இல் விஷ்ணு அவளுக்காக ஏதாவது பரிசு வாங்கலாம் என பார்த்துக் கொண்டிருந்தான். பல நாட்கள் கழித்து அவளை தனியாக சந்திக்கப் போகிறான், அதுவும் வேறு ஒரு ஊரில். ஆகையால் அவளுக்கு ஏதாவது அன்பளிப்பு தர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அந்த கடையில் தேடிக் கொண்டிருந்தான். அங்கு அவளோ நேரம் பார்ப்பதும் பின்பு வழி பார்ப்பதும் என மாறி மாறி அதையே செய்து கொண்டிருந்தாள்.




 அவன் அவளுக்கு என்ன பரிசளித்தான்? அதைக் காணும் போது அவள் எவ்வாறு உணர்ந்தால்? பின்பு அவர்களுக்குள் காதல் மலர்ந்ததா? எவ்வாறு காதலை உணர்ந்தார்கள்? 

அடுத்த பகுதியில் - வழித்துணையே Part 2.

Stay tuned!

Comments

Anonymous said…
Great work nithya really loved it,I hope you do fabulous in future.
Kiddu mk said…
Wow romba nal kalichu story padikaren
Story reading my favourite hobby ladt ah 12th la padichathu aprm yathum avlo padikala sema work. Tamil la illama tanglish la use panunga and documentry ah illama conversation ah solunga it attracts more readers. Keep doing this ma.

Popular posts from this blog

Paarthavudan Vizhundhen

Unnai kanda nodi manadhil aazhamaga otti kondadhu... Un vaasanai en mel patta podhu en udalum manathadhu...  Un vizhigalil en vizhigalai kanda podhu asaivugal illamal dhegam uraindhadhu... Nee yaaro? Dhevadhaiyo? Andha iraivanin amsamo?  En kaadhali aavayo? En thunaiviyaai maaruvayo? Mudhal naal mudhal murai unnai kandadhume kaadhal konden en anbe... Un kangala? Idhazhgala? Imaigala? Punnagaiya? Theriyavillaye penne... Edhu un mel kaadhal kolla cheidhadhu puriyavillaye..                                   - Nithyasree Gururajan 
Kannanin Raadhai