Skip to main content

Sollamal Solgiraan - Part 2

சொல்லாமல் சொல்கிறான்

Shivram : Happy and safe journey. Take care! :)
ஆச்சரியம் கொண்டேன். என்ன பதிலளிப்பது என தெரியாமல் திணறினேன்.    இரண்டு மனதாக தவித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் மனதை ஒருநிலைப்படுத்தி  "thank you so much  you tc too"  என்று ஒரு மெசேஜ் அனுப்பினேன்.  இத்தனை நாள் ஒன்றாக அருகில் இருந்த போது வராத ஒரு சந்தோஷம், ஒரு பதட்டம், ஒரு ஏக்கம் எல்லாம் சேர்ந்து என்னை வாட்டியது. முதல் முறையாய் இருவரும் WhatsAppil பேசிக்கொண்டோம்.  திருமணம் ஆகியிருந்தாலும் "முதல் காதல்" போல் இருந்தது அந்த உணர்வு.  அருகில் இருந்த போது பேசாத நாங்கள், இப்போது தனியே வந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.  அழகாக இருந்தது மனம்விட்டுப் பேசிய அந்த மூன்று மணி நேரங்கள்.  முன்பே அழகாக இருந்த அந்த அலங்கரித்த இரவு  இப்போது இன்னும் அழகாக தோன்றியது. மூன்று மாதங்களாய் பேசாத கதைகளை எல்லாம்  3 மணிநேரத்தில்  பேசி மகிழ்ந்தோம். மறுநாள் காலை என் தோழிக்கு திருமணம். அந்த மேடை, அலங்காரம், கூட்டம், மேளம்  இதையெல்லாம் பார்க்கும்போது  என் திருமணம் தான் நினைவிற்கு வந்தது. அழகான வாழ்வினை இத்தனை காலம் வீணடித்து  வந்ததை எண்ணி கவலை கொண்டேன்.  அவனோடு இப்போது எனக்கு மறுமணம் நிகழ்ந்தால் பரவாயில்லை என தோன்றியது.   இப்போது இதை சொன்னால் கிண்டலாக தான் இருக்கும்,  ஆனால் என் மனம் அவ்வாறு தான் சிந்தித்தது. தோழியின் திருமணம் முடிந்தது.  வாழ்த்து சொல்லிவிட்டு  பரிசை கொடுத்துவிட்டு விடைபெற்றேன்.  கோயம்புத்தூரில் இருந்து சென்னை திரும்ப ரயிலில்  ஏறினேன். நேற்று இரவு பேசும்போது ரயில் ஏரிவிட்டு அவனுக்கு call  செய்ய சொன்னான்.   முதலில் தயங்கினேன்.  பின்பு நானே அவன்   நம்பருக்கு call  செய்தேன்.  முதல் முதலாக அவன் குரலை போனில் நான் கேட்கிறேன்.  அதே போல்  அவனும் கேட்கிறான். Dial  செய்து பேசினேன்.  முதலில் இருவருக்கும் என்ன பேசுவது என்று  தெரியவில்லை. திக்கினோம்,  திணறிநோம். பின்பு,  மனதில் பூட்டி வைத்திருந்த பல கவலைகளையும்,  ஆசைகளையும்,  என்னுடைய கனவுகளையும்  அவனிடம் கூறினேன்.  ஒரு வார்த்தை  மறுத்துப் பேசாமல் நான் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தான்.  நாம் பேசுவதை  மறு வார்த்தை பேசாமல் கேட்டுக் கொள்வதற்கும் அவ்வப்போது ஒருவர் தேவைதான். அவனின் அந்த குணமே போதும்  எனக்கு அவனை  பிடித்து போவதற்கு.  எங்களுக்குள் காதல் மலர்ந்தது என சரியாக சொல்லத் தெரியவில்லை.  ஆனால் புரிதல் இருந்தது.  நண்பர்கள் போல் எங்கள் உறவானது.  இரண்டு மணி நேரம் call  பேசினோம்.  பின்பு நான் உறங்க சென்றேன்.  அப்போது WhatsAppil  ஒரு மெசேஜ் வந்தது. 
Shivram : Happy talking to you, Thanks for spending your time with me!
Leela : I'm happy too. Excited to see you :) 
Shivram : Excited? Haha.. See you tmrw. Take care. Safe journey. Good night! 

உறங்க தான் சென்றேன்.  ஆனால் உறக்கம் வரவில்லை.  பைத்தியம் போல் எனக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தேன்.  இத்தனை நாள் ஏன் முட்டாளாக இருந்தேன்  என தெரியவில்லை.  இவளவு இனிமையானவனை  காரணமே இல்லாமல் ஏன் வெறுத்தேன்?? சென்னை ரயில் நிலையம்  வந்துவிட்டது.   யோசிப்பதிலேயே  ஒரு இரவு   முழுவதும் சென்றுவிட்டது. Cab'il  செல்லலாம் என OLA app'il புக்  செய்வதற்கு phone'ai எடுத்தேன். 3 Missed calls.  யார் என்று பார்த்தேன்,  "அவன்".  உடனடியாக அவன் நம்பருக்கு call  செய்தேன்.  ஸ்டேஷன் வெளியேதான்  நிற்பதாக சொன்னான்.  சரி நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு திரும்பினேன்,  எனது பின்புறம்  அவன். அதிர்ச்சி அடைந்தேன்!  பின்பு இருவருக்கும் பேச வார்த்தையே வரவில்லை.  தயங்கி அங்கேயே ஓர் இரு   நிமிடங்கள் நின்றோம்.  பின்பு  நானே முதலில்  பேசினேன். Hi என்றேன்!  பின்பு இருவரும் சேர்ந்து அவனது காரிலேயே வீட்டிற்கு சென்றோம். ஸ்டேஷனில்,  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு  உறைந்து போன அந்த நொடிகள், அவ்வளவு அழகு!  உதடுகள் பேச தேவைப்படவில்லை.  எங்கள் கண்களே பேசி விட்டது.  அந்தத் தருணம்!  ஐயோ!!! மூன்று  மாதங்களாய் நடக்காத ஒன்று ஒரு வினாடியில் நடந்துவிட்டது.  எல்லாவற்றையும் அப்படியே மாற்றிவிட்டது.  இது என்ன மாயமோ?? 
இருவரும் நல்ல நண்பர்களாக சில மாதங்களை கழித்தோம்.  என்னுடைய கனவுகள் என்னவென்று அவன் கேட்டு தெரிந்து கொண்டான்.  என்னுடைய கவிதைகள் கதைகள் பற்றி எல்லாம்  அவன் அறிந்து கொண்டான். என்னை முழுவதுமாக புரிந்து கொண்டான்.  எனக்காக என் சந்தோஷத்திற்காக அவன் நிறைய செய்தான்.  அவனை நான் நேசிக்கவும் ஆரம்பித்து விட்டேன் என்பதையும் உணர்ந்து விட்டேன்.  அதேபோல் அவனும் என்னை நேசிப்பது  அவன் கண்களே வெளிப்படுத்தி விடும்.  இருவரும் சொல்லிக் கொள்ளாமலேயே வாழ்ந்து கொண்டிருந்தோம். 
"Getting your best friend as your life partner"  கடினமான ஒன்று.  ஆனால் விலைமதிப்பற்றது.  அதே போல் தான் எங்கள் உறவும் இருந்தது. ஒரு பாடலில் வருவது போல "  என் தந்தை   தோழன்  ஒன்றான ஆணை நான் கண்டு கொண்டேனே"  அவ்வாறு இருந்தான் அவன் எனக்கு. நான்கு மாதங்கள் அப்படியே ஓடி விட்டது. 
அன்று ஒரு விடுமுறை நாள்.  ஆகஸ்ட் 15  ஆம் தேதி.  சனிக்கிழமை.  இரண்டு நாட்கள் விடுமுறை என்பதினால்,  சிறிது மனம்விட்டுப் பேச அவனுக்கு நேரம் கிடைத்தது.  மதிய உணவு முடிந்ததும் உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும் என்றான்.  பதறினேன்.  என்ன சொல்லப் போகிறான் என்று பயந்தேன். எங்கள் வீட்டில் balcony'il  ஒரு ஊஞ்சல் இருக்கும். என்னை அழைத்து  வந்து அதில்  அமர்த்தினான்.  பின்பு  லேசாக புன்னகைத்தான். 
Shivram : I know,  உனக்கு  ஒன்னுமே புரியல.  நீ excited ah   இருக்கேன்னு தெரியும்.  உன்கிட்ட சில உண்மைகள் சொல்லனும்னு இருக்கேன். I don't know,  நீ     இத எப்படி  எடுத்துப.  But,  இவளோ நாள் கழிச்சும் நான் சொல்லலேன்னா அது சரியா இருக்காது. 
Leela :  ஐயோ! Please.....  கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க.  எவ்வளவு நேரம் suspense வெப்பிங்க? Please, fast. 
Shivram :  சொல்றேன்! 

அவனுடைய கடந்தகால வாழ்வைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்.  அவனுடைய காதலியைப் பற்றி சொன்னான்!  அவன் சொல்ல சொல்ல,  எனக்குள் ஏதோ நேர்ந்தது,  ஒரு பயம்,  ஒரு பதட்டம், "insecurity"  என்று சொல்வார்களே,  அதுதான்.  அவனை மனதார என் காதலனாகவும் கணவனாகவும் ஏற்றுக்கொண்ட எனக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிகள் கொடுத்தான். அவர்கள் சந்தித்தது,  பேசியது,  பின்பு எப்படி அவர்களுக்குள் காதல் மலர்ந்தது என்று கூறினான். அற்புதமாக  சென்ற  அந்த நாட்கள்,  உறக்கமில்லா இரவுகள்,  இதைப்பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தான்.  ஆவலோடு கேட்பதுபோல் நான் நடித்தாலும்,  உள்ளே ஒரு பயம் இருந்துகொண்டேதான் இருந்தது.  அவளை மறக்கவில்லை,  அவளோடு தான் வாழ எனக்கு இஷ்டம்,  அவள் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை என்றெல்லாம் சொல்லி விடுவானோ என்று உள்ளே கதறினேன்.  ஆனால் அதை வெளியே காமிக்க முடியவில்லை. அழகாய் சென்று கொண்டிருந்த நாட்கள் திடீரென்று  ஒரு நாள் நிறமற்று  நிசப்தமாக  மாறியது என்றான்.  அவ்வாறு சொன்னதுமே என்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை,  கண்ணை விட்டு சில நீர்த்துளிகள் வெளியே வந்தன. 
ஒரு நாள் சுமார் இரவு 8 மணி அளவிற்கு call  செய்திருக்கிறான்.  அவளும் அவள் மொபைலை dining table மேலே மறந்து  வைத்துள்ளாள். அவள்,  மேலே அவள் ரூமில் இருந்தாள்.  அழைப்பு வரவும் அவள் அம்மா அவளை அழைத்து call attend  செய்ய சொல்லி உள்ளார்.  அவள் படியில் இறங்கி வரும் வேளையில்,  வேகமாக வந்ததால்,  கால் தவறி அவள் கீழே விழ அவளுக்கு தலையில் பலமாக அடிபட்டது. Blood loss  அதிகமாக இருந்தது.  அங்கேயே மயங்கி விட்டாள்.  அனைத்தையும் மறந்துவிட்டாள் அன்று மறந்தது இன்னும்  அவள் நினைவிற்கு வரவில்லை என்றான்.  அவள் call attend செய்யவில்லை என்று அவன் மறுபடி மறுபடி அழைத்துக் கொண்டே இருந்தபோது,  அவள் அன்னை தான் தகவல் சொன்னதாக சொன்னான்.  ஹாஸ்பிடல் சென்று அவளைப் பார்க்க முயன்றபோது,  அவரது பெற்றோர்கள் இவனை அழைத்து பேசினார்கள். 
பெற்றோர்கள்:  உங்கள பத்தி Charu  ஓட friend  சொன்னா.  எனக்கு எப்படி react  பண்றதுனே தெரியல. But,  இப்போ  என் பொண்ணு  எப்படி இருக்கான்னு உங்களுக்கே தெரியும்.  உங்களை பார்த்ததுமே நீங்க எவ்வளவு  ஒரு நல்ல life partner ah  இருப்பீங்கன்னு எங்களுக்கு புரிஞ்சது.  ஆனால் அவளோட health conditions  வெச்சு பார்த்தா அவளால உங்க life spoil  ஆகக்கூடாது Shiva.  புரிஞ்சுக்கோங்க.  உங்க life  நல்லா இருக்கணும்னு தான் நாங்க சொல்றோம். 
Shivram : But,  அது ஒரு பெரிய விஷயம் இல்ல uncle. Charu va  நாம் பாத்துப்பேன்.  நல்லா பாத்துப்பேன்.   அவ இல்லாம எப்படி? Uncle, please! Petrorgal :  சொல்றதுக்கு easy ah தான் இருக்கும். But practical ah  யோசிச்சு பாருங்க Shiva. it's not possible. We'll take care of her. Please.  நீங்க உங்க life ah  பாருங்க. Anyways,  இப்படி ஒரு incident நடக்காமல் இருந்து நீங்க எங்க கிட்ட வந்து பேசியிருந்தா,  கண்டிப்பா we would have accepted. No doubt in that. But  இப்போ அது முடியாது. 
Shivram : Uncle, I'll take care of her. Please trust me. ஐயோ!  உங்களுக்கு எப்படி புரியவைப்பேன் தெரிலையே. Okay! I'll wait for her uncle. அவ cure  ஆகுற வரைக்கும் அவளுக்காக wait  பண்ணுவேன்.  ஏன் முடிவ நான் மதிக்கிறதா இல்ல. Please accept it. 
பெற்றோர்கள்:  ஐயோ Shiva! It's difficult. Why don't you understand?  உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு, family இருக்கு. Why are you not thinking about it?  யோசிச்சு பாருங்க,  இதுக்கு அப்புறம் உங்க இஷ்டம். 

அவன் காதலி Charu vin  பெற்றோர்கள் இவ்வாறு கூறிவிட்டார்கள்  என்று கூறினான்.  அவன் கண்களில் கண்ணீர்.  இருப்பினும் எனக்கு புரியவில்லை!  ஏன் அவளை குணப்படுத்துவது  கடினம் என கூறினார்கள் என்று.

Leela :  ஏன் அவங்கள cure பண்ணவே முடியாதுன்னு சொல்றாங்க?  என்ன ஆச்சு அவங்களுக்கு? 
Shivram : Hmmm..... She had gone to Coma.  அவ எப்போ normal ஆவான்னு  யாருக்குமே தெரியாது. 

அவன் கண்கள் முழுவதும் கண்ணீர்.   அழுது கொண்டிருந்தான் அவன். அன்பிற்குரியவர்கள் அழுவதை பார்ப்பது  எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது!   பெருகி ஓடும்  கண்ணீரை அடக்கி கொள்ள இயலவில்லை. அவன் அழுவதை பார்த்து இன்னும் அதிகமாய் பெருகி ஓடியது என் கண்ணீர் நதி.  அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. சிறுபிள்ளை போல் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான். அதை காண இயலவே ல்லை என்னால்.  இதுவரையில் அன்பாக அவனை ஸ்பரிசித்ததே இல்லை. வேறு வழி தெரியாமல் நான் அமர்ந்து இருந்த ஊஞ்சலில் இருந்து எழுந்து அவன் அருகே சென்று அவன் கரங்களை பிடித்து தடவிக்கொடுத்து சமாதானம் சொன்னேன். என்னை எதிர்கொள்ள முடியாமல் திரும்பிக்கொண்டு அழுது கொண்டிருந்தான்.  என்னென்னவோ சொல்லி பார்த்தேன் அவனால் கண்ணீரை நிறுத்த முடியவே இல்லை.  அதை பார்க்கும்போது என் கண்களாலும் விழி நீரை அடக்கி உள்ளே வைத்துக்கொள்ள இயலவில்லை. வேறு ஏதும் வழி இல்லாமல் அவனருகில், மிக அருகில் சென்று, அவனை கட்டி அணைத்தேன்.  சில நேரங்களில் வார்த்தைகளை விட ஒரு அணைப்பு காயத்திற்கு மருந்தாக மாறிவிடும். அவன் தலையை என் தோளில் சாய்த்து அவன் கூந்தலை கோதி தடவிக்கொடுத்தேன். அவனை சமாதானப்படுத்த முயன்றேன்.   ஒரு வழியாக இருவரும் அழுவதை நிறுத்தினோம். பின்பு அருகிலிருந்த நாற்காலியில் அவனை அமர்த்திவிட்டு தண்ணீர் எடுத்து வந்தேன். மறுபடியும் உரையாடலை எவ்வாறு துவங்குவது என்றே தெரியவில்லை. 

Leela :   இப்படி ஒரு past உங்களுக்கு இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. Seriously, I don't know,  என்ன சொல்றதுன்னு தெரியல.
Shivram : Leave it Leela. நாம என்ன பண்ண முடியும்? Whatever is destined to happen will happen!
Leela : அப்புறம் என்னாச்சு? நீங்க மறுபடியும் Charu va போயி பாக்கவே இல்லையா?
Shivram : அவங்க அப்பா அவளோ பேசுனதுக்கு அப்புறம் மறுபடியும் எப்படி போயி பாக்குறதுன்னு தெரியல. அப்றம் வீட்லயும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி compel பண்ணாங்க. வெய்ட் பண்ணி use இல்ல, உன் life நீ பாருடா ன்னு friends உம் சொன்னாங்க. நிறைய நாள் வந்த proposal எல்லாம் வேண்டாம்னுதான் சொல்லிட்டு இருந்தேன். அப்படியே ரெண்டு வருஷம் போயிருச்சு. நாமளும் கஷ்டப்பட்டு அம்மா அப்பாவையும் கஷ்டப்படுத்தி இப்படி இருக்கறதுனால என்ன பிரயோஜனம்னு யோசிச்சு பாத்தேன்.  அதுக்கப்புறம் தான் மனசை மாத்திக்க try  பண்ணேன். Then,  உங்க வீட்ல இருந்து proposal வந்தது. ஒத்துகிட்டேன். அப்புறம் நம்ம marriage.Then, you know what happened and also what's happening!Leela :  இப்படி ஒரு past இருக்கிற நீங்களே கெடச்ச life ah accept பண்ண ready ah இருக்கும்போது, நா ஏன் முட்டாள்தனமா இவ்வளவு நாள் இப்படி waste பண்ணேன்னு எனக்கு தெரியல.  ஒரே கோபம் தான். என்னோட சம்மதமில்லாம கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.  இது மட்டும்தான் என் மனசுல ஓடிட்டு இருந்துச்சு. But இப்போ அப்படி இல்ல.  தெளிவா இருக்கேன்.
Shivram : You mean?
Leela : I.... I mean.... Ram, I'm in Love with you! ❤

எல்லோரும் அவனை Shiva என்று அழைத்தாலும், எனக்கு "Ram" என்று அழைக்கவே பிடித்திருந்தது. அந்த கண்ணீர் வடியும்  விழிகளில் ஒரு நெகிழ்ச்சி!  உதடுகளில் புன்னகை.  அப்படியா என்று பாவனையால் வினவினான்.

Leela. : Yes! எனக்கே தெரியாம உங்க மேல,  நான் feelings develop பண்ணிட்டேன் Ram. But,  ஒரு சரியான தருணம் கிடைக்கல, to confess.  I don't know if this is the right time or not. எனக்கு சொல்லனும்னு தோணுச்சு.  சொல்லிட்டேன்!
Shivram : Life la ஒரே ஒரு Love தான்னு நெனச்சுட்டு இருந்தேன். But, உன் கூட இப்போ நான் spend பண்ண நாட்கள் எனக்கு மறுபடியும் Charu ஓட நான் வாழ்ந்த அந்த அழகான நாட்கள் மாதிரி அவளோ happy ah இருந்துச்சு. உன்னோட ஆசைகள், கனவுகள் பதி என்கிட்ட சொல்லும்போது எனக்காக ஒருத்தி கிடைச்சுட்டான்னு தோணும்.

என்னையும் என் கனவுகளையும் என்னை விட அதிகமாக புரிந்து கொண்டிருந்தான் அவன். இதற்கும் மேல் என்னால் அவனை பிரிந்து அவனிடமிருந்து விலகி இருக்கவே முடியவில்லை. வழக்கம்போல் கண்களில் சில நீர்த்துளிகள். அதை கண்டு அவனே எழுந்து வந்து என்னருகில் உட்கார்ந்து என்னை கட்டி அணைத்துக் கொண்டான். அவன் மார்பில் சாய்ந்து நூறு ஜென்ம வாழ்வையும் அன்நொடியில் வாழ்ந்து முடித்தேன். யாருடும் இல்லாத ஒரு உணர்வும் பாதுகாப்பும் அவனோடு இருக்கையில் கண்டு கொண்டேன்.

பாடல்கள் எல்லாம் அழகாக எழுதப்படுகிறது.  ஒரு பாடலாசிரியர் எழுதியது போல" இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும் நாடகம் இனித்திடுமே". அவ்வாறு தினமும் வசீகரமான நாடகங்கள் நடந்தது.

அவன் என்னை நெருங்க, நானும் மயங்க, அவன் தீண்டல் என் வெட்கத்தை தூண்ட, வார்த்தைகளின்றி இரவும் அந்த நிலவும் மௌனத்தில் பேசிக்கொள்ள, நாங்களோ, இரு கண்களால் பாஷை ஒன்றை உருவாக்கிட.... வேறு என்ன நான் சொல்ல?

வாழ்வே பரிபூரணம் அடைந்தது. அவ்வப்போது வாக்குவாதங்களும் சண்டைகளும் கோபங்களும் வந்து சென்றாலும் கூட அன்பில் சிறு களங்கம் கூட ஏற்படவில்லை.

இதற்கிடையில் அவன் நண்பர்களிடம் Charu vai பற்றி விசாரித்தேன். இவன் காதல் கதையை முழுவதுமாக தெரிந்துகொள்ள முயன்றேன். அப்போது, அவன் diary ஒன்று வீட்டில் இருப்பதாக நண்பன் ஒருவன் சொன்னான். உடனடியாக அதை தேடி எடுத்து அவனைப் பற்றியும் அந்தப் புனிதமான காதலை பற்றியும் தெரிந்து கொண்டேன். என் காதல் கதையை புத்தகமாக எழுதி publish செய்வது தான் என் கனவாக இருந்தது. ஆகையால் அவன் காதல் கதையை முழுவதுமாக புரிந்து கொண்ட பின்பு அதையே எழுதி publish செய்துவிடலாம் என்று முடிவிற்கு வந்தேன். மேலும், Charu vai பற்றியும் கேட்டு அறிந்தேன். அவள் உடல் நிலையைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.

நான்கு மாதங்களில் வெற்றிகரமாக   கதையை எழுதி முடித்து விட்டேன். ஆனால் இது எதுவும் அவனுக்கு தெரியவே தெரியாது. இரு வாரங்களில் எங்கள் கல்யாண நாள் வர இருந்தது.  ஆகையால், எங்கள் திருமண நாளன்று அவன் எதிர்பாராத ஒரு பரிசாக என் புத்தகத்தை அவனுக்கு பரிசளித்தேன். தனியே அமர்ந்து படித்திட சொன்னேன். 5 மணி நேரங்களுக்கு பின் அறையை விட்டு வெளியே வந்தான், கண்களில் கண்ணீரோடு.

Shivram : Hey Leela! ஏன் இப்படி பண்ண?  நம்ம Love story எழுதியிருப்பேன்னு  நெனச்சா, நீ............
Leela : Chill!  நம்ம story ah விட உங்க காதல் தான் எனக்கு உண்மையும் நேர்மையும் தெரிஞ்சது. This will be my first book and it'll be released by Charu herself.
Shivram : What? என்ன சொல்ற நீ?
Leela : Ram, Charu is fine now. அவங்களுக்கு எல்லா நியாபகமும் இருக்கு. I met her yesterday. அவங்க கிட்ட நான் மனசு விட்டு நிறைய பேசினேன். அதே மாதிரி அவங்களும் பேசினாங்க. நான் கேட்டதுமே, she accepted for publishing the book.
Shivram : But ஏன் நீ போயி அவள பாத்த இப்போ? Why are you doing this Leela?
Leela : எனக்கு தோணுச்சு Ram. அவ்ளோதான். She is married and has a daughter, அவங்கள மாதிரியே அழகா! Her health is alright now. அவங்க life ah  அவங்க happy ah lead பண்றாங்க like us.
Shivram : I don't have words to say! உன்ன விட பெரிய gift எனக்கு என்னவா இருக்க முடியும் Leela? எப்பவுமே என்னிக்குமே நீதான் எனக்கு எல்லாம்😍

என்னை கட்டி அணைத்துக் கொண்டு பல முத்தங்கள் தந்தான். அவன் கூந்தல் கோதி என் அரவணைப்பை நானும் வெளிப்படுத்தினேன்.

சில மாதங்களுக்குப் பிறகு.......


என் புத்தகம் அச்சடிக்கப்பட்டு விட்டது. அதற்கு ஒரே காரணம் என்னவன் தான். அவன் இல்லையெனில் இன்று  இப்புத்தகம் இல்லை, இவ்வாழ்வுமில்லை.என் முதல் புத்தகம் சாருவின் கைகளால் வெளியிடப்பட்டது. ராமுக்கும் சாருவுக்கும் நேரில் பார்த்துக் கொண்டபோது வார்த்தைகளே வரவில்லை. இருப்பினும், நல்ல நண்பர்களாக மாற முயற்சித்தனர். சில வாரங்களிலேயே என் புத்தகத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது.

கணவை நிறைவேற்றிய சந்தோஷம் ஒரு பக்கம், கணவனோடு வாழும்  சுபவாழ்வு ஒரு பக்கம், எங்கள் சுகமான வாழ்விற்கு இன்னும் மெருகேற்ற மூன்றாவதாக ஒரு சந்தோஷம் எங்களுக்கு காத்திருந்தது!  ஆம், என்னுள்ளே இன்னொரு உயிரும் வளர்வது தெரியவந்தது. இனி இருவரல்ல நாம் மூவர் என பேரின்பம் கொண்டோம்!!!


*****************************

  நிச்சயமற்ற வாழ்வில் ஒரு கணம் கூட வீணாக கூடாது. நினைத்தது  கிடைக்கவில்லை எனில் கிடைத்ததை பாதுகாத்து பராமரித்தல் வேண்டும். கணவனின் அன்பும் ஆதரவும் இருந்தால்  பெண்களின் ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேற்றப்படும். கனவு பேரன்போடு இணையும்போது கிடைக்கும் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும்.


Comments

Unknown said…
அழகான காதல் சிறுகதை.வார்தைகளில் நல்லதொரு முதிர்ச்சி. அருமை.மேலும் வளர்க.

Popular posts from this blog

Paarthavudan Vizhundhen

Unnai kanda nodi manadhil aazhamaga otti kondadhu... Un vaasanai en mel patta podhu en udalum manathadhu...  Un vizhigalil en vizhigalai kanda podhu asaivugal illamal dhegam uraindhadhu... Nee yaaro? Dhevadhaiyo? Andha iraivanin amsamo?  En kaadhali aavayo? En thunaiviyaai maaruvayo? Mudhal naal mudhal murai unnai kandadhume kaadhal konden en anbe... Un kangala? Idhazhgala? Imaigala? Punnagaiya? Theriyavillaye penne... Edhu un mel kaadhal kolla cheidhadhu puriyavillaye..                                   - Nithyasree Gururajan 
Kannanin Raadhai