தாயுமானவளே
அந்திமாலை நேரம், அழகாய் மஞ்சள் நிற வானம். பறவைகளின் பாடல்கள், மாணவர்களின் பேச்சு சத்தம், பேருந்துகளின் ஊதுகுழல் சத்தம். இதற்கிடையில் நானும், அவளும், எங்கள் தோழர்களும். என் கண்கள் மெதுவாக அவளை காண துடித்தது ! மெதுவாக, யாரும் பார்க்காத நேரத்தில், அவளை காண முயன்றேன். அவள் புன்னகைக்கும்போது ,வெளியே தெரியும் அவள் பற்கள், அதிலும் அவள் தெத்து பல் அழகோ அழகு. மற்ற பெண்கள் போல் இல்லாமல், குறைந்த அழகு சாதன உபயோக பொருட்கள் அவள் முகத்தில் !
கண்களுக்கு மையிட்டு, நெற்றிக்கு போட்டும் குங்குமமும் இட்டு, அழகாக தலை கூந்தலை பின்னி விட்டிருந்தாள். அந்த காற்றும் அவள் கூந்தலை தழுவ, ஓர் இரு கூந்தல், பின்னலைவிட்டு வெளியேற முயற்சித்தது. அதை பிடிக்க உடனே அவள் கை விரல்கள் எழுந்தது . நான் அவளை பார்ப்பது அவளுக்கு தெரிந்திருந்தும், தெரியாதது போல் நடிப்பதில் அவள் சிறந்த நடிகை. பிறை நிலா போல் அந்த புருவங்கள், திடீரென சுருங்கிட கண்டேன். பயம், கோபம், வெட்கம், எல்லாம் கலந்த ஒரு பார்வை, என் தோழன் விக்னேஷ்-இன் மீது பாயக்கண்டேன். அப்போது அவள், சிரித்துக்கொண்டே திட்டுவதை கண்டு வியந்தேன் ! ஒரு நிமிடம் என்னையே நான் தொலைத்தது போல் இருந்தது. அவள் கை வளை ஓசை என்னை விழிக்க வைத்ததும், என்ன நடந்தது என்று பார்த்தேன்! அப்போது தான் புரிந்தது, என் நண்பன் விக்னேஷ் என்னையும் அவளையும் சேர்த்து வைத்து பேசினான் என்று.
ஷிவானி: அதான் சொல்றேன்ல..அப்டிலாம் ஒன்னும் இல்லனு. அப்பரம் ஏன் இப்டி பண்றீங்க?
விக்னேஷ்: அப்டி இல்ல இல்லனு வாய் மட்டும் தான் சொல்லுது! அப்டி தான் னு தானே மனசு சொல்லுது.
அப்பொழுது என் பெயரை அழைத்து என்னிடம் அவள் எல்லா கோபத்தையும் காட்டினாள்.
ஷிவானி : ஏய்ய், நீயாச்சும் ஓட்டாதீங்க னு சொல்ல மாட்டியா? எப்ப பாரு இப்டி சிரிச்சிட்டே இருந்தா என்ன பன்றது?
என்று என்னிடம் கேட்டுவிட்டு, அவள் இடது கைகளால் நெற்றியை அடித்துக்கொண்டாள். அப்போது, அவள் விரலில் இருந்த மோதிரத்தில் அவள் கூந்தல் சிக்கிக்கொண்டது. அவள் நெற்றியையும் குழலையும் தொடும் அந்த மோதிரம் நானாக இருக்க கூடாதா என ஆசை கொண்டேன். என்னை அறியாமல் அவளை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்பது இப்போது தான் தெரிந்தது. அவள் நிறம் ஒன்றும் வெள்ளை அல்ல. அனால் அவள் மனம் வெள்ளை. அந்த மாநிறம் தான் அவள் அழகு. பால் போன்ற இதயம் கொண்டவளே என் தோழி ( அனால் காதலி )!
எங்கள் நண்பர்கள் எங்களை சேர்த்து வைத்து பேசும் வரை நன்றாக தான் பேசிக் கொண்டிருந்தாள். தாய் இல்லாத என்னை போன்ற ஒவ்வொரு ஆணிற்கும் அவள் அன்னையே! எதோ ஒரு பாடலில், அந்த கவிஞர் எழுதியது போல, “என் தாயை போல ஒரு பெண்ணை தேடி உன்னை கண்டு கொண்டேனே…” என்ற வரிகளில் என் வாழ்வில் உண்மையாக நேர்ந்தது. அவள் எப்போதுமே என்னை ஒரு நல்ல நண்பன் என கூறுவாள். அவளுக்கு மிகவும் பிடித்த நண்பன் பிரேம். அவனுக்கு அடுத்து நீ தான் என்று சொல்வாள்! எங்கள் நட்பை காதலாக மாற்றுவதற்காக தானோ என் நண்பர்கள் என்னை அவளோடு சேர்த்து வைத்து கிண்டல் செய்தார்கள்? யாருக்கு தெரியும் இந்த வித்தைகள் எல்லாம்? ஆனால் ,அவள் எல்லாம் அறிந்தவள். நட்பு, காதலாக மாறிவிடுமோ என்ற பயத்தில் தானோ அவள் பேசுவதை நிறுத்தினளோ என்னவோ?!
காதல் இல்லை என்று அவள் உதடுகள் மட்டும் தான் சொன்னது! என்னை பார்க்கும் வேளையில் அவள் கண்களும் ,சிவக்கும் கன்னமுமே அவள் காதலை வெளிப்படுத்தி விட்டது! எனக்கு நன்றாகவே தெரியும் அவள் என்னை நேசிக்கிறாள் என்பது. ஆனால் அதை அவளிடம் கேட்டு, எங்கள் நட்பும் முறிந்துவிட்டால்? அந்த துன்பத்தை என்னால் எதிர்கொள்ளவே முடியாது. ஒரு நாள், இதை என் நண்பர்கள் (பிரேம், விக்னேஷ், மனோஜ்) இடம் சொல்லலாம் என்று நினைத்தேன். அவளுக்கு கேலி செய்வதே பிடிக்கவில்லை, இது தெரிந்தால் அவர்கள் இன்னும் அல்லவா கிண்டல் செய்வார்கள். அதனால் அவர்களிடமும் சொல்லவில்லை.
முதல் வருட கல்லூரி வாழ்க்கையை இப்படியே கழித்தேன். முதல் பருவத்தில் அவள் என்னுடன் இல்லை. ஆகையால் தானோ நான் நான்கு அரியர் (arrear) வைத்தேன்? இரண்டாம் பருவத்தில், அவள் வந்ததால், அந்த நான்கு, இரண்டாக குறைந்தது.
வாட்ஸாப்பில் (WhatsApp) எப்போதுமே ஆன்லைனில் (online) இருப்பாள், ஆனால் எப்படியோ படித்து நல்ல மதிப்பெண்களும் பெற்றிடுவாள்! சத்தியமாக அவள் ஒரு அதிசய பிறவி தான். ஒவ்வொரு நாளும் 2-3 பாடல்களை ஸ்டேட்டஸில் (status) வைப்பாள். அதுவும் எல்லாம் காதல் பாடல்கள். எல்லோரும் கேட்போம், யாருக்காக வைக்கிறாய் என்று. யாருக்குமே இல்லை என்று சொல்லி சொல்லி அவள் சிரிப்பால் சமாளித்து விடுவாள். என்றாவது ஒரு நாள் அது சூர்யாவிற்கு தான் என்று சொல்வாளோ என காத்து கிடந்த காலங்கள் எல்லாம் தனி சுகம் தான். அந்த சிரிப்பில் ஒரு மாயம் இருக்கிறது. யாருடன் பேசினாலும் அழகாக புன்னகைத்துக்கொண்டே இருப்பாள். அவள் சிரித்தாள், கோபம் கொண்டவர்களுக்கு கூட, சினம் குறைந்துவிடும். அவள் என்னவள் என்பதினால் நான் அப்படி சொல்லவில்லை. நீங்களே அவளை பார்த்தால் அப்படி தான் சொல்வீர்கள். அவளை எப்போது நேசிக்க ஆரம்பித்தேன் என தெரியவில்லை..ஆனால் நேசித்தேன். அது மட்டும் தெளிவாக தெரிந்தது. அவள் என்னிடம் பேசும்போதெல்லாம் அவள் உயிர் தோழன் பிரேம்-ஐ பற்றி விசாரித்துக்கொண்டு இருப்பாள். அவன் சாப்பிட்டானா? படித்தானா? எழுதினானா? தூங்கினானா? என்று அக்கறையோடு விசாரித்துக்கொண்டு இருப்பாள். நான் சொன்னது போல, அவள் இவனுக்கும் தாயைப் போலே தான் இருந்தாள். முதலில் அவள் கேட்கும்போது அவள் அக்கறையை கண்டு ஆச்சர்யம் கொண்டேன்! ஆனால் கொஞ்சம் நாட்களுக்கு பிறகு அவள் அவனை பற்றி கேட்கும்போது கோபம் தான் வந்தது. ஏனெனில், அவள் என்னவள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இதை தான் ‘பொசெசிவ்னெஸ்’ (possessiveness) அதாவது, தனக்கு மட்டுமே சொந்தம் என கூறுவார்களா என்று நினைத்துக்கொண்டேன். அதன் பின்பு அவளே குறைத்துவிட்டால் என்னுடன் பேசுவதை. அவளுக்கு நான் எந்த அளவு தகுதியானவன் என தெரியாமல் நானும் ஒதுங்கிவிட்டேன்! நான்கு வருட பொறியியல் படிப்பு முடிய முடிய அவளுக்கு வேலை கிடைத்தது. பெங்களுருவில் ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தோடு வேலை கிடைத்தது. நான்காம் வருட பாதியிலேயே அவள் அங்கு ட்ரெயினிங் (training) காக சென்று விட்டால். அவளை காணாமல் ஒவ்வொரு நாளும் வருடமாக தோன்றியது! வலிகளில் பெரிது காதல் தரும் வலி என்பதை உணர்ந்தேன். ஒரு தலை காதலாக இருந்த என்னுடைய காதல் அப்படியே மாண்டுவிடும் என வறுத்தத்தோடு நாட்களை கழித்தேன். நான்காம் வருடம் முடிந்தவுடன் மேலும் படிக்க தேர்ந்தெடுத்தேன்.
MBA படிக்க கோயம்புத்தூரிலேயே ஒரு நல்ல கல்லூரியை தேர்ந்தெடுத்தேன். அதுவும் அவளிடம் கேட்டு தான். அவள் விரும்பிய கலோரியிலேயே என் இரண்டு வருட MBA-வை முடித்தேன். அவளிடம் பேசவே முடியவில்லை! என் அலைபேசியை தொலைத்தேன். புதிய ஒன்று வாங்கிய பின்பும் கூட அவளின் அலைபேசி எண்ணை பதிவு செய்யவில்லை. அதையும், அவளையும் என் ஞாபகத்தில் இருந்து அழிக்க முடிவு செய்தேன். இரண்டு ஆண்டுகள் முடிய, எனக்கும் பெங்களுருவில் வேலை கிடைத்தது. உடனே அவள் தான் நினைவிற்கு வந்தாள் . அவள் அன்பயும், அருகாமையயையும் இழந்தேன். ஏங்கினேன் அவளுக்காக. என் ஒரு தலை காதல், திருமணம் வரை போக வாய்ப்பே இல்லை என நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் அவளை, என் ஷிவானியை கண்டேன், என் அலுவலகத்தில்!!
முதல் நாள் அன்று..என் அலுவலகதிற்கு சென்றிருந்தேன். MD -இன் கேபினுக்குள் (cabin) அவள் இருந்தாள். பச்சை நிற குர்தி..கருமை நிற துப்பட்டா..கண்களில் வழக்கதிற்க்கும் அதிகமான மை. கையில் கடிகாரம். உதட்டில் மெரூன் நிற லிப்ஸ்டிக். காதில் வெள்ளி நிற கற்கை ஜொலித்து கொண்டிருந்தது. எப்போதுமே பின்னல் பின்னி இருக்கும் அவள் கூந்தல் இன்று வழக்கதிற்க்கு மாறாக கைகளின் மீதும் , அவள் முதுகின் மீதும் தழுவிக்கொண்டிருந்தது. அவள் நடை, உடை, பாவனை எல்லாமே மாறி இருந்தாலும், அவள் புன்னகை மட்டும் மாறவே இல்லை. அதே சிரிப்போடு அவள் எதிரில் அமர்ந்திருந்த ஒருவர், அதாவது MD -இடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் . என் கண்கள் உண்மையை தான் பார்த்து கொண்டிருந்ததா? இல்லை அது கனவா என்று எனக்கு தெரியவே இல்லை. என்னை நானே கிள்ளிக்கொண்டேன். அப்போது நான் அங்கே நிற்பதை பார்த்த ஒரு பெண் என்னை அழைத்தாள் .
லேடி ஸ்டாப் : Hey! Is this Suriyakumar? MD is waiting for you. Please go inside.
என்னிடம் அவள் சொன்னாள், "MD உனக்காக காத்திருக்கிறார், வேகமாக உள்ளே செல்லவும்" என்று. அவள் சொல்லிய படியே உள்ளே செல்ல கதவின் அருகே சென்றேன். முகம் முழுவதும்வேர்த்து இருந்தது. கைகளில் ஓர் நடுக்கம். என் வேலையையும் MD-யையும் நினைத்து அல்ல! அவளை நினைத்து! என் காதலை மறுபடியும் சந்திப்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை! மனதில் சந்தேகங்களும் குழப்பங்களும் வந்தது! பல்வேறு கேள்விகள் எழுந்தது. என்னவள் அவள் தானா? அவள் இங்கு என்ன செய்கிறாள்? ஒரு வேளை, அவளுக்கு திருமணம் ஆயிருக்குமோ? இல்லை நிச்சயம் ஆயிருக்குமோ? இல்லை அவள் வேர் யாரையாவது காதலிக்கிறாளோ? என்று குழம்பினேன். என்னவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு MD -இன் அறைக்குள்ளே சென்றேன்.
Suriya: Excuse me sir! May I get in?
MD : Yes! Come in…Welcome Mr.Suriyakumar, Project Manager. Take your seat. Shivani, you also take your seat.
Suriya : Thank you sir.
அவர் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். அவளும் என்னை தொடர்ந்தாள். அவள் பின் தொடர்ந்தது தெரியாதது போல் நான் நடந்தேன். யாரோ என்னை பார்ப்பது போல் தோன்றியது.அடுத்த நொடியே என் பெயரை அவள் அழைத்தாள். தடுமாறினேன்! அவள் குரல் கேட்டதும் மெய் சிலிர்த்தது. கறைந்தேன். நகராமல் உறைந்தேன். அவளோ என்னை நெருங்கினாள்.அவள் வாசனை கூட அவளவு சுகம். பயத்தில் கண்களை மூடி கொண்டேன். திறக்கும் போது கண் முன் அவள் தெரிந்தாள், அவள் இருந்தாள் என் முன்னே. கல்லூரியில் பார்த்த அதே ஷிவானி, அதே கண்கள், அதே பிறை நிலா போல் புருவங்கள், அதே விரலில் மோதிரம். இதை எல்லாம் விட, அதே வெள்ளை மனம், சிறந்த குணம்.
Shivani : ஹே, எப்படி இருக்க? உன்கூட பேசி எவ்ளோ நாள் ஆச்சு? உன்ன மறுபடியும் பாப்பேன் ன்னு நெனச்சு கூட பாக்கல. அப்பா எப்படி இருக்காரு? பிரிஎண்ட்ஸ் (friends) கிட்ட லாம் டச் (touch) இருக்கா? பேஸ்ரியா??
அவள் பேசிக்கொண்டே இருந்தாள். கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தாள். பதில் அளிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவளை கண்டதினால் என் மனம் நிறைந்தது. என்ன பேசுவது என்றே தெரியவில்லை. திணறினேன். திக்கினேன் !!!
இறுதியாக, தைரியத்தை வரவழைத்து அவளிடம் பேசினேன்.
சூரியா : நான் நல்லா இருக்கேன் .. நீ எப்படி இருக்க? நீ எப்படி இங்க? எத்தன வருஷமா வேல பாக்குற ?
ஷிவானி : நான் ப்லெஸ் (place) ஆனதே இங்க தான். ரெண்டு வருஷமா இங்க தான் வேல பாக்குறேன். கூடவே MBA வும் இங்கியே கம்பெனி (company) ஹெல்ப் (help) பண்ணி படிக்க வெச்சாங்க. இப்போ ப்ராஜெக்ட் மேனேஜர் (project manager) ஜாப் (job) ல இருக்கேன். இன்னிக்கு தான் எனக்கும் பிரஸ்ட் (first) டே (day) உன்ன மாதிரி. எனக்கு ஒன் (one) வீக் (week) முன்னாடியே தெரியும் நீ இங்க வர போறன்னு. அதான் ரெண்டு பேரையும் ஒரே டிம்(team) க்கு, பிரெஷர்ஸ் டீம் (freshers team) க்கு ப்ராஜெக்ட் மேனேஜர்ஆ போட சொல்லி சஜ்ஜஸ்ட் (suggest) பண்ணேன் . ஆக்ஸ்ப்ட் (accept) பண்ணிட்டாங்க. நீ இருக்க போற பிளாட் (flat) ல உன் வீட்டுக்கு எதிர் வீடு தான் என் வீடு. சோ, இனிமே நாம மீட் (meet) பண்ணிட்டே தான் இருக்க போறோம். நிறைய பேச போறோம், ஷேர்(share) பண்ண போறோம். ஈவென் (even) நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே கேபின் (cabin). சேரி, பிரஸ்ட்(first) நம்ம கேபின் க்கு (cabun kku) போலாம் வா.
அவள் சொன்ன எல்லாமே ஒரு கனவாக தெரிந்தது எனக்கு. அவள் இல்லா நேரத்தில் அந்த இறைவன் மீது கோபித்திருக்கிறேன், ஏன் என்னையும் அவளையும் சந்திக்க வைத்தான் என்று. அனால் இன்று தான் அதை புரிந்து கொண்டேன். என் காதலுக்கு புது அர்த்தம் கிடைத்து விட்டது . அவளோடு அவள் பக்கத்தில் இருப்பதற்கு, நான் என்ன தவம் செய்தேனோ? காலையிலும், அந்தி மாலையிலும், அவளே இனி என் வாழ்வில். என் காதலியை திரும்ப பெற்று விட்டேன் என்று சொல்வதை விட, என் தாயை பெற்று விட்டேன் என சொல்வது தான் சரி. என் வாழ்வே அவளால் அழகாக மாறியது. நானே முழுமை அடைந்தது போல் இருந்தது.
ஒரு நாள் எங்கள் கேபின் (cabin) இல் பேசிக்கொண்டிருந்த பொது, யாரையாவது காதலிக்கிறாயா என்று கேட்டாள். ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தேன். இல்லையடி,நீ என் மனதில் ஆழமாக பபுதைந்திருக்கும் போது வேறு யாரை நேசிப்பது என்று மனம் சொல்ல துடித்தது. அனால், இப்போது எப்படி அதை சொல்வது, என எண்ணி, இல்லை யாரையும் இல்லை என சொல்லிவிட்டேன். கேட்ட உடன் அழகாக சிரித்தாள். அந்த சிரிப்பு எதற்கு என்று புரியவில்லை எனக்கு! அதே கேள்வியை நான் அவளிடம் கேட்டேன். என் மனதிற்க்கு பிடித்ததை போல் யாரையும் இதுவரை பார்க்கவில்லை என கூறிவிட்டாள். ஒரு பக்கம் சந்தோஷம், ஒரு பக்கம் சோகம். இருந்தாலும் எனக்கு அவளுக்கு என்னை பிடிக்கும் என்று. வெட்கமோ? நாணமோ? தயக்கமோ? ஏன் சொல்ல மறுக்கிறாள் என தெரியவில்லை.
எதிர் எதிர் வீட்டில் இருவரும் தனி தனியே தங்கிருந்தோம்.
ஒரு நாள், இடி மின்னலொடு மழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னல் ஓரத்தில் அவள் ஞாபகத்தில் ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது என் போன் (phone) இற்கு ஒரு கால் (call) வந்தது. எடுத்து பார்த்தேன், "அவள்". உடனே எடுத்து பேசினேன். எடுத்த உடன் ஹெலோ (hello) என்றாள் . ஆஹா!! எவ்வளவு இனிமையான குரல்! மறுபடியும் ஹெலோ (hello) என்றாள். நானும் பதிலுக்கு ஹெலோ (hello) என்றேன். " இந்த இடியும், மின்னலிலும், தனியாக இருக்க பயமாக இருக்கிறது. இன்று ஒரு நாள் மட்டும் உன் வீட்டிற்கு வரலாமா?" என கேட்டாள். ஆனந்தத்தில் என்ன கூறுவது என்று தெரியவே இல்லை. "தாராளமாக வரலாம்" என்று சொல்லி விட்டு போனை (phone'ai) கட் (cut) செய்து விட்டேன்.
ஐந்து நிமிடங்களில் என் வீட்டின் கதவை தட்டினால். திறந்தேன். ஓர் புது அவளை கண்டேன் அப்போது. மை இல்லாத விழிகள், தோடு இல்லாத செவிகள், கலைந்து போன கூந்தல். கழுத்தில் மட்டும் ஒரு மெல்லிய செயின் (chain), அதில் சிறிய டாலர் (dollar) மட்டும் இருந்தது. உள்ளே வந்தாள்.
சூரியா: கொஞ்சம் நீட்டா (neat) இருக்காது, அட்ஜஸ்ட் (adjust) பண்ணிக்கோ.
ஷிவானி: ஒன்னும் பிரச்சனை இல்ல. என் வீடும் இப்டி தான் இருக்கும்.
சூரியா : ஓகே ஓகே ... குடிக்க ஏதாவது வேணுமா?
ஷிவானி: ம்ம்ம்ம்ம்ம்....... கொஞ்சம் தண்ணி மட்டும் குடு போதும்!
சூரியா: ஒகே.. நீ உள்ள போ. நான் எடுத்துட்டு வரேன். நான் இங்க ஹால்லேயே (hall) படுத்துக்கிறேன்.
ஷிவானி: ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே!
சூரியா : இல்ல இல்ல சொல்லு .
ஷிவானி : நாளைக்கு ஆஃபீஸ் (ஆபீஸ்) லீவு (leave). சோ (so) இன்னிக்கு தூங்க வேண்டாம். பேசலாம். இல்லனா படம் பாக்கலாம்.
என்னை பார்பதற்காகவும் என்னோடு பேசுவதற்காகவும் அவள் பயத்தை ஒரு காரணமாக வைத்து கொண்டு என் வீடிற்ற்கு வந்தாள். அவளுக்கு பேசிக்கொண்டிருப்பது மிகவும் பிடிக்கும். அவள் எப்போதுமே யாரோடாவது பேசிக்கொண்டே இருப்பாள். இந்று நான்.!!!! என் அருகே அவள். அவள் அருகே நான். என் கண்ணொடு அவள் கண் பார்க்க இரு பார்வையும் இணைந்தது. என்னை மயக்கும் அவள் வாசம் இன்று என் அருகே. இரவு முழுவதும் பேசினாள் , பேசினாள், முடிக்கவே இல்லை. நானும் அவளை ரசிப்பதை நிறுத்தவே இல்லை. எதிர்பாராமல் அவள் கைகள் என்னை தொட, அதை கூட கவனிக்காமல் பேசிக்கொண்டே இருந்தாள். சில நேரத்தில், கலைந்த அந்த கூந்தல் என்னை ஸ்பரிசிக்க, அவள் ஸ்பரிசத்தில் நான் மயங்கினேன். உறக்கம் இல்லாத இரவை ரசித்தது இதுவே முதல் முறை. அந்த ஒரு தருணத்தை என்னால் மறக்கவே இயலாது. இன்று மட்டும் என்னோடு இருந்த அவள் , எப்போது என்றுமே என்னோடு என் வீட்டில் இருபாள் தெரியவில்லயே. இரவும் விடிய, அவள் கதைகளும் முடிய, அவள் விடை பெற்றாள். அன்றில் இருந்து, பல முறை அவள் என் வீட் டிற்கு வர ஆரம்பித்தாள். நானும் அவள் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தேன்.
ஒரு நாள், கன மழையில் நனைந்து விட்டு, நான் வீட்டிற்க்கு வந்தேன். சளி பிடித்தது. ஓர் இரு நாட்களில் காய்ச்சலும் வந்தது. இதை அறிந்த அவள், பதறினாள். என்னை உடனடியாக டாக்டர் (டாக்டர்) இடம் கூட்டி சென்றாள். மூன்று நாட்களுக்கு என்னோடு இருந்தாள். ஏன் தாயை போலெ என்னை பார்த்துக்கொண்டாள். இந்த அக்கறையால் தான் என் தாயாகவே மாறிவிட்டாள் அவள். தினமும் காலையில் காபி (coffee) அல்லது டீ (tea) கொடுத்து, என்னை எழ வைத்து, மதியம் அவள் கையாலே சமைத்து , சில நேரங்களில் எனக்கு மிகவும் முடியாத பொது அவளே ஊட்டி விட்டு, மருந்தை நேரத்திற்க்கு கொடுத்து, அவள் பிள்ளை போலெ எனை தங்கினாள். அவள் காதல் பார்வை பட்டு வந்த காய்ச்சல் அவள் அக்கறையாலும், அன்பினாலும், விட்டு சென்றது. அதற்க்கு பின்பும், தினமும், அவளே எங்கள் இருவருக்கும் சேர்த்து சமைத்து வந்தாள்.
என் காதலை அவளிடம் சொல்வதற்ற்கு முயற்சித்து கொண்டே இருந்தேன், ஆனால் முடியவில்லை. நான் வேலையில் சேர்ந்தது ஜூலை மாதம். அவள் பிறந்தநாள் டிசம்பர் மாதம். பிறந்தநாளில் ஆவது சொல்லி விட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். முந்தைய நாள் இரவு 11:30 மணி அளவில் அவள் வீடிற்ற்கு சென்றேன். 12:00 மணிக்கு வாழ்த்து சொல்லி விட்டு திரும்பினேன். அப்போது கூட எனக்கு சிறிய அளவு தெரியம் கூட வரவில்லை என் காதலை அவளிடம் சொல்ல. அடுத்த நாள் காலை, அதாவது அவள் பிறந்தநாள் அன்று காலை 10:30 மணி அளவில் அலுவலகத்தில் உள்ள எங்கள் டீம் மெம்பெர்ஸ் (team members) எல்லோரும் வந்து வாழ்த்து சொல்லி விட்டு, காலை உணவை உண்டு விட்டு போவதாக அவள் என்னிடம் சொல்லி இருந்தாள். ஆகையால் 9:00 மணி அளவில் அவள் வீட்டு கதவை தட்டினேன். இரு நிமிடங்களில் கதவை திறந்தாள். அங்கு நான் கண்டது அவளா?? தேவதையா??!! இல்லை ஸ்ரீதேவியா?? என்று வியந்தேன்!!!
பச்சை நிறமும், நீல நிறமும் கலந்த ஒரு புடவை. அதற்க்கு ஏற்றவாறு, தங்க நிற ரவிக்கை. கடல் அலை போல் தவழும் அவள் குழல், அதில் மனம் மயக்கும் மணம் கொண்ட மல்லிகைப்பூ. இமைகளில் மை. இமைகளின் கீழே கண் லைனர். காதில் பெரிய ஜிமிக்கி. நெற்றியின் மேல் ஒரு சிறிய வட்ட போட்டு. ஒரு சிட்டிகை அளவு குங்குமம். பச்சை, நீலம், மற்றும் தங்க நிற வளையல்கள் கை நிறைய அணிந்து கொண்டிருந்தாள். இடது கையின் மோதிர விரலில் கற்கள் வைத்த மோதிரம். நகத்தில் நைல் போலிஷ் (nail polish). வலது கையில் மருதாணி. கால்களில் கொலுசு. அவள் ஆடி மேல் அடி வைத்து நடக்கையில் அதில் எழும் சத்தம் மிகவும் இனிமை. தேவதை அம்சம் அவளோ?? அழகே பொறாமை படும் பேரழகியை, எனை எப்போது சேர்வாய்? என்று ஆச்சிரியம் கொண்டேன். சேலையில் மடிப்பு இல்லாமல், ஒரே மடிப்போடு அவள் இடது தொழ் மீது ஒரு சிறிய காப்பூசியால் (safety pin) ஒட்டிக்கொண்டிருந்தது. அது இடையை விட்டு விலகாமல் இருக்க, அவள் இடது கைகள் அதை சரி செய்து கொண்டே இருந்தது! இவளவு அழகை இதுவரை நான் கண்டதே இல்லை. சீக்கிரம் அவளை மனைவியாய் ஆக்கி கொள்ள மனம் துடித்தது. அவளை விட்டு என் கண்கள் அசையவே இல்லை. நான் அப்படி பார்ப்பதை அவள் பார்த்துவிட்டு, அவள் புருவங்களை உயர்த்தி, "என்ன" என்று செய்கையில் கேட்டாள். மிகவும் அழகாக இருக்கிறாய் என்றேன். வெட்கத்தில் கன்னம் சிவக்க, உதடுகள் புன்னகைக்க, தேங்க்ஸ் (thanks) என்றாள். என்ன பேசுவது என்றே தெரியாமல் ஆவளயே பார்த்துக்கொண்டிருந்தேன். உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்றேன். அதற்க்கு முன்பு நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று கூறினாள். நான் ஒருவரை நேசிக்கிறேன் என்றாள். இதயம் துடிப்பதை நிறுத்தி விட்டது. மூச்சிற்ற்கு கூட காற்று பற்றவில்லை. உடனே எழுந்து, வெளியே சென்று விட்டேன். என்னை அவள் பின் தொடர்ந்தாள்.
ஷிவானி: என்னாச்சு? ஏன் எந்திரிச்சுட?
சூரியா : ஒன்னும் இல்ல, மூச்ச்சு விட முடியாத மாதிரி இருந்துச்சு, அதான் மா. நீ ஏதோ சொல்லிட்டு இருந்தியே, சொல்லு!
ஷிவானி : நான் ஒருத்தர லவ் (love) பண்றேன். அவுரு 10:30 க்கு நம்ம டீம் மெம்பெர்ஸ் (team members) ஓட வருவாரு. இங்கயே இரு, எங்கயும் போயிராத ஒகே?
சூரியா : ஒகே, இருக்கேன்.
ஷிவானி : அவங்க வர வரைக்கும் என்கூடவே இரு. உள்ள வா!!
அவள் நேசிப்பவரை பற்றி வர்ணித்து கொண்டிருந்தாள். அப்போது எதையும் நான் கேட்கவே இல்லை. உலகத்தில் இருப்பதே தேவை இல்லை என்று தோன்றியது. எங்கேயாவது சென்று விடலாம் என்றெல்லாம் தோன்றியது. காதலில் தோல்வி இருக்கலாம். ஆனால் எதற்க்கு இப்படி பட்ட தோல்வி என்று கலங்கினேன். வேறு வழி இல்லாமல், அவள் பேசுவதை கேட்பது போல் நடித்தேன்.
டீம் மெம்பெர்ஸ் (team members) எல்லோரும் வந்தார்கள். ஒரு பெரிய பரிசை அவளிடம் கொடுத்தார்கள். இதற்கிடையில் அவள் காதலன் யாராக இருக்கும் என யோசித்துக்கொண்டிருந்தேன்.
ஷிவாணி: எல்லார்கிட்டயும் ஒப்பேனா (open ah) ஒண்ணு டிக்கலார் (declare) பண்ண போறேன். என் கைல இருக்கிறது ஓர்த்தரோட போட்டோ (photo). அவரை தான் லவ் (love) பண்றேன். கல்யாணம் பண்ணிக்க போறேன்.
என்று சொல்லிவிட்டு, அந்த பரிசை என்னிடம் கொடுத்து பிரிக்க சொன்னாள். என் கைகள் பயத்திலும், சோகத்திலும், ஏக்கத்திலும் நடுங்கியது. அதை மெதுவாக, அவள் உதவியோடு பிரித்தேன். பிரித்த உடன் நான் பார்க்கவே இல்லை. அவளே அந்த போட்டோவை (photo'vai) எல்லோரிடமும் காட்டினாள். அப்பொது அங்கு இருந்த ஒருவன் கேட்டான் " ஓகே, இப்பவச்சும் கேக் கட் (cake cut) பண்ணலாமா? Mrs. ஷிவாணி சூரியாகுமார்??? ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே எனக்கு புரியவில்லை. அந்த போட்டோவை (photo'vai) பார்த்தேன். என் முகம்... கல்லூரியில் எடுத்து புகைப்படம்... அதை கண்டு வியந்தேன்... ஆச்சிரியம் அடைந்தேன்.
ஷிவாணி: என்ன பாக்குற? கொஞ்சம் நேரம் முன்னடி கூட உன்ன பத்தி தான் பேசிட்டு இருந்தேன். அதை கூட நீ கண்டுக்காம ஏதோ யோசிச்சிட்டு இருந்த. உண்மையா சொல்லனும்னா, காலேஜ் லேயே உன்ன நான் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். நீயும் தான்ணு தெரியும். ஆனா, ரெண்டு பேரும் ஏன் சொல்லிக்கவே இல்லன்னு தெரியல. அதான் போட்டோ ல இருக்கிறவர லவ் பண்றேன் ன்னு சொன்னேன். புரிஞ்சிதா இப்பவச்சும்??
சூரியா : இது எல்லாம் கனவா நிஜமா ன்னு கூட எனக்கு தெரியல. எப்படி சொல்றதுன்னும் தெரியல. ஐ.... ஐ..... ஐ.........
ஷிவாணி: நீ ஒன்னும் சொல்ற மாதிரி தெரியல. ஐ லவ் யு சூரியா, ஐ லவ் யு சோ மச் ( I love you suriya, I love you so much) .
என்று அவள் சொன்னதுமே, அவளை கட்டி அணைத்தேன். நெற்றியில் முத்தமிட்டேன். இதற்காக தான் இதனை நாள் எங்கள் காதல் காத்துக்கொண்டிருந்ததோ??? அவளுக்காக நான், அவளுக்காகவே நான் என்பதை உணர்தேன்.
****†******†*******†******†****
உண்மையான காதல் என்றும் தோர்ப்பதில்லை. அவசரப்பட்டால் எதுவும் நடப்பதில்லை. இது போல் உங்கள் வாழ்விழலும் ஏதாவது கதைகள் இருந்தால், nithu8172@gmail. com க்கு மின் அஞ்சல் அனுப்புங்கள்... கூடிய விரைவில், உங்கள் கதையும் ஒரு தமிழ் சிறுகதையாக மாறி வாழ்த்த படும்.
*நன்றி*
Comments