நீ முகர்ந்த கருவறை வாசம் நான் முகரவில்லை.. நீ உறங்கிய அன்னையின் மடியில் நான் உறங்கவில்லை.. நீ வளர்ந்த சூழ்நிலைகளில் நான் வளரவில்லை .. நீ சாய்ந்த தந்தையின் தோளில் நான் சாயவில்லை.. நீ அம்மா என்று அழைத்தபோது நான் அழைக்கவில்லை.. ஆனாலும் காலம் நம்மை சேர்த்தது..
நம் அன்னைகளுக்குள் சொந்தம் இல்லை என்றாலும் நம் பிள்ளைகளுக்குள் சொந்தம் உண்டாகும்..
பூர்வ ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமோ? இல்லை இறைவன் என் ஏக்கத்திற்கு அளித்த வரமோ? என்ன சொல்வது? இன்பம் நீ தந்தது .. பாசம் உன் பார்வையில்.. நேசம் உன் கண்களில்... விழி காக்கும் இமை போல அக்கறை என் மெல் உனக்கு... உயிரின் உயிராக... மண்ணில் விதையாக உன்னை காப்பேன் அன்பே...
என்னோடு நீ இருக்கையில் அன்னை மடி வாசம் நீ உணருவாய்... உன்னோடு நான் இருக்கையில் தந்தையின் தோளின் பாதுகாப்பை உணர்ந்தேன்...
என் உடன் பிறவா உடன் பிறப்பே.. ஏழேழு ஜென்மத்திற்கும் நீ வேண்டும் எனக்கு ...
- Nithyasree Gururajan
Comments